பாலு மகேந்திரா நூலகம்

பாலு மகேந்திரா நூலகம் என்பது இலங்கையின், கிளிநொச்சியில் உள்ள திரைப்படத் துறைக்காக அமைக்கப்பட்ட இலாப நோக்கற்ற ஒரு சுயாதீன நூலகம் ஆகும்.

வரலாறு

தொகு

2020 ஆம் ஆண்டு மே மாதத்தில் கொரோனா வைரசு பெருந்தொற்று நிலவிய காலத்தில் இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணத்தின் இளைஞர்கள் ஒன்றிணைந்து பட்டறை என்ற பெயரில் திரைப்பட பயிற்சி பட்டறையை கானொளி மூலமாக சுமார் நான்கு மாதங்கள் நடத்தினார்கள். இதில் இதில் இலங்கையிலிருந்தும், தமிழகத்திலிருந்தும் பலர் இணைய வழியில் கலந்து கொண்டனர். இதன் முடிவில் கிடைத்த உந்துதலின் விளைவாக 2020 திசம்பரில் இந்த நூலம் துவக்கப்பட்டுள்ளது. நூலகத்துக்கு ஈழத்தில் பிறந்து திரையுலகில் புகழ்பெற்றவரான பாலு மகேந்திராவின் பெயர் சூட்டப்பட்டது. இந்த நூலகத்தின் துவக்க விழாவின் கானொளி வாயிலாக ஈரானிய இயக்குநர் மஜீத் மஜிதி, சிங்கள திரைப்பட இயக்குநரான பிரசன்ன விதானகே, பாரதிராஜா, இலங்கை நாடக ஆளுமையான மௌனகுரு சின்னையா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்த நூலகம் துவக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே 10,000 நூல்களும், குறுவட்டுகளும் சேகரிக்கபட்டுள்ளன.[1]

இணையதளம்

தொகு

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலு_மகேந்திரா_நூலகம்&oldid=3119122" இலிருந்து மீள்விக்கப்பட்டது