பாலேஸ்வரர் கோவில்

பாலேஸ்வர் கோயில்(Baleshwar Temple) என்பது இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில், சம்பாவத் மாவட்டம், சம்பாவத் நகருக்குள் அமைந்துள்ள சிவபெருமானுக்கு கட்டப்பட்ட ஒரு பழங்கால கோயில் ஆகும்.

பாலேஸ்வர் கோயில்
பாலேஸ்வரர் கோவில் is located in உத்தராகண்டம்
பாலேஸ்வரர் கோவில்
Location in Uttarakhand
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:உத்தரகாண்ட்
மாவட்டம்:சம்பாவத்
அமைவு:சம்பாவத்
ஆள்கூறுகள்:29°20′12″N 80°05′25″E / 29.3366°N 80.0904°E / 29.3366; 80.0904
கோயில் தகவல்கள்
வரலாறு
அமைத்தவர்:சந்த் வம்சத்தினர்

சந்த் வம்சத்தின் ஆட்சியாளர்களால் கட்டப்பட்ட பாலேஸ்வர் கோயில் கல்லைக் குடைந்து கோவில் கட்டும் கலையின் அற்புதமான அடையாளமாகும். பாலேஸ்வர் கோயிலைக் குறிக்கும் வரலாற்று கையெழுத்துப் பிரதிகள் எதுவும் இல்லை; இருப்பினும், இது கி.பி 10 மற்றும் 12 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.

கண்ணோட்டம் தொகு

பிரதான பாலேஸ்வர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது (இவர் பாலேஸ்வர் என்றும் அழைக்கப்படுகிறார்). பாலேஸ்வர் வளாகத்தில் வேறு இரண்டு கோயில்கள் உள்ளன, ஒன்று ரத்னேஷ்வருக்கும் மற்றொன்று சம்பாவதி துர்காவிற்கும் உரியதாகும். பாலேஷ்வர் கோயிலுக்கு அருகில் ஒரு நதி ( நன்னீர் வளம்) உள்ளது. மகாசிவராத்திரி நாளில், பாலேஸ்வர் கோயில் வளாகத்தில் மிகவும் மக்கள் கூட்டம் சேர்கிறது.

ரத்னேஷ்வர் மற்றும் சம்பாவதி துர்கா கோயில்களின் வெளிப்புறங்கள் உள்ளூர் தெய்வங்களின் வெவ்வேறு வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

மேற்கோள்கள் தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலேஸ்வரர்_கோவில்&oldid=3432028" இலிருந்து மீள்விக்கப்பட்டது