பால்மைரா பவளத்தீவு

பால்மைரா பவளத்தீவு (ஒலிப்பு: /pælˈmaɪrə/) ஐக்கிய அமெரிக்காவினால் ஆளப்படும் பவளத்தீவாகும். இத்தீவு (4.6 sq mi (12 km2)) வடக்கு பசிபிக் பெருங்கடலில் ஹவாய் மற்றும் அமெரிக்கன் சமோவா தீவுகளுக்கிடையே அமைந்துள்ளது. இப்புவியியல் அமைப்பில் பவளப்பாறையைத் தவிர இரு ஆழமற்ற கடற்காயல்கள் மற்றும் 50க்கு மேற்பட்ட மணல் மற்றும் பாறை தீவுத்திடல்கள் உள்ளன.ஆட்கள் வசிக்காத இத்தீவு பால்மைரா பவளத்தீவு தேசிய வனவாழ்வு உய்விடமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றுவர அரசின் அனுமதி தேவை[1]. 2005இல் உலகெங்குமிருந்து அறிவியலாளர்கள் சிலர் இங்கு சுற்றுப்புறச் சூழலை ஆய்வு செய்ய ஆராய்ச்சி நிலையம் ஒன்றை நிறுவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.[2].

பால்மைரா பவளத்தீவு - செயற்கைக்கோள் படிமம் N-03-05 2000 (1:50,000)
பால்மைரா பவளத்தீவு - NOAA கடல்வழி வரைபடம் (1:47,500)

மேற்கோள்கள் தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பால்மைரா_பவளத்தீவு&oldid=3562924" இருந்து மீள்விக்கப்பட்டது