அங்கன்வாடி
அங்கன்வாடி (Anganwadi) என்பது இந்திய அரசால் நடத்தப்படும் தாய் சேய் நல மையம் ஆகும். இங்கு பிறந்தது முதல் ஆறு வயது வரை உள்ள குழந்தைகளுக்கான சேவைகள் வழங்கப்படுகின்றன. 1975 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டுச் சேவைகள் திட்டத்தின் (ICDS) கீழ் குழந்தைகள் பசியால் வாடி நலமற்றவர்களாக மாறுவதைத் தடுக்கவும் அவர்களிடையே பெருமளவில் காணப்படும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்கவும் இம் மையங்கள் துவங்கப்பட்டன. தமிழ்நாட்டில் இம்மையங்கள் பொதுவாக பால்வாடி என்ற பெயரில் அறியப்படுகின்றன. தமிழகத்தில் 54 ஆயிரத்து 439 அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. இங்கு பயிலும் குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்து, அரம்ப கால கல்வி கற்பதற்கான சூழல், குழந்தைகள் பாதுகாப்பாக, ஆரோக்கியமாக வளர்வதற்கு தேவையான பணிகள் செயல்படுத்தப்படுகின்றன. அங்கன்வாடி மையங்களில் 5 வயது நிறைவு செய்து, தொடக்கப் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ் வழங்கும் திட்டத்தை 2017 சூன் மாதம் தமிழக முதல்வர் கே.பழனிசாமி தொடங்கி வைத்தார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "அங்கன்வாடி குழந்தைகளுக்கு முன்பருவ கல்வி நிறைவு சான்றிதழ்: முதல்வர் கே.பழனிசாமி வழங்கினார்". செய்தி. தி இந்து. 14 சூன் 2017. பார்க்கப்பட்ட நாள் 14 சூன் 2017.