பாளேகுளி அனுமந்தராய சுவாமி கோயில்
அனுமன் கோயில் (கிருஷ்ணகிரி)
பாளேகுளி அனுமந்தராய சுவாமி கோயில் தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி மாவட்டம், பாளேகுளி என்னும் ஊரில் அமைந்துள்ள அனுமன் கோயிலாகும்.
அருள்மிகு அனுமந்தராய சுவாமி கோவில் | |
---|---|
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | கிருஷ்ணகிரி |
அமைவிடம்: | பாளேகுளி, கிருஷ்ணகிரி வட்டம் |
சட்டமன்றத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
மக்களவைத் தொகுதி: | கிருஷ்ணகிரி |
கோயில் தகவல் | |
மூலவர்: | அனுமந்தராய சுவாமி |
குளம்: | பெரிய மலை தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | 4 ம் சனி |
கோயில் அமைப்பு
தொகுஇக்கோயிலானது பெரியமலை எனப்படும் இயற்கை எழில்சூழ்ந்த மலையின் அடிவாரத்தில் உள்ளது. இந்த மலையின் உச்சியில் பெருமாள் கோயில் உள்ளது. இந்த மலைக் கோயிலுக்கு செல்லும் வழியின் துவக்கத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இங்கு அனுமந்தராயர் சந்நிதியுடன், விநாயகர் சந்நிதி. பெருமாள் சந்நிதி போன்றவை அமைந்துள்ளன. இத்தல விருட்சமாக துளசி உள்ளது. மலைச் சுணைகளில் இருந்து வரும் நீரானது கோயில் குளத்தின் ஆதாரமாகவும், தீர்த்தமாகவும் உள்ளது.
பூசைகள்
தொகுஇக்கோயிலில் சனிக்கிழமைகளில் சிறப்பு பூசைகள் நடக்கின்றன. புரட்டாசி சனிக்கிழமை முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.[1]