பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி என்ற பள்ளியானது, காஞ்சிபுரம் மாவட்டம் திருபெருமந்தூர் தாலூகாவில் உள்ள, குன்றத்தூர் நகரத்தில், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்வழிக் கல்விப்பணியில் ஈடுபட்டுள்ளது. இப்பள்ளியை புலவர் வெற்றிச்செழியன் அவர்கள் தொடங்கி நடத்திவருகிறார்.
1994இல் சென்னைக்கருகே குன்றத்தூரில் திரு. வெற்றிச்செழியன் அவர்கள் ‘பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி’யைத் தொடங்கினார். தமிழ் அறிஞர் பெயரைத் தாங்கி ஆங்கில வழிப்பள்ளிகளுக்கு மாற்றாக தமிழ்வழியில் நடத்தப்படும் பள்ளி என்ற கருத்தியலைப் பெயரிலேயே தாங்கி, தொடங்கப்பட்ட முதற்பள்ளி இது.
தொடக்கக் கல்வியை முழுமையாகத் தமிழ் வழியில் நடத்த வேண்டும் என்பதை முன்னிறுத்தி தமிழ்வழிக் கல்விக்கான 102 தமிழறிஞர்களின் சாகும் வரை உண்ணா நிலை போராட்டம் தமிழகக் கல்வி வரலாற்றில், ஏன் தமிழக வரலாற்றிலேயே குறிப்பிடத்தக்க ஒன்று. அதன் நோக்கம் ஆட்சியாளர்களாலும், கல்வி வணிகர்களாலும் திட்டமிட்டுத் தோற்கடிக்கப்பட்டாலும் அது தமிழ்வழிக் கல்விக்கான ஒரு பேரெழுச்சியை ஏற்படுத்தியது. அக்காலக் கட்டத்தில் பல புதிய பள்ளிகள் தமிழ்வழியில் தொடங்கப்பட்டன.
இருப்பிடம்
தொகுஇந்த பள்ளி குன்றத்தூரில் சேக்கிழார் நகரில் திருநீலகண்டர் சாலையில் அமைந்துள்ளது. மரங்கள் சூழ்ந்த இயற்கை எழிலான மூன்று தளகட்டடத்தில் செயல்படுகிறது.
பாடத்திட்டம்
தொகுகுன்றத்தூர், பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளி, துளிர், தளிர் (LKG, UKG) வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை தமிழ்நாடு சமச்சீர் கல்வி முறையைப் பின்பற்றுகிறது. ஒரு வகுப்பின் சராசரி மாணவர்களின் எண்ணிக்கை 40 ஆகும். இரண்டாம் மொழியாக ஆங்கிலம் ELF (English Learning Foundation)உடன் இணைந்து ஒலிப்பியல் (Phonic Method) முறையில் கற்பிக்கப்படுகிறது.
திருக்குறள் ஓக (யோகா) இருக்கை அறிவர் அசித்தர் அவர்களால் கற்பிக்கப்படுகிறது.
தமிழர் மரபுக் கலையான சிலம்பம் தமிழர் வீரக்கலை அமைப்பினரால் கற்றுத்தரப்படுகிறது.
மாணவர்களுக்கான ஆளுமைப் பயிற்சி மேன்மை வாழ்வியல் பயிற்சி நிறுவனத்தால் வழங்கப்படுகிறது.