பா. ஆனந்தகுமார்

பா. ஆனந்தகுமார் காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியரும், தமிழறிஞரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார்.

வாழ்க்கைக் குறிப்பு

தொகு

பா. ஆனந்தகுமார் மதுரை மாவட்டத்தில் அ.பாதமுத்து, சந்தோசம் ஆகியோருக்குப் பிறந்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பட்டமும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் முதுகலை, முனைவர் பட்டங்களைத் தமிழ்த்துறையில் பெற்றுள்ளார்.

இவரது ஆய்வுகள் மற்றும் எழுதிய நூல்கள்

தொகு

இவரது முனைவர் பட்ட ஆய்வு "பாரதியார், குமரனாசான், குரஜாடா அப்பாராவு கவிதைகளில் புனைவியல்" என்பதாகும். இவர் தொடர்ந்து ஆய்வுக் கட்டுரைகளையும், மொழிபெயர்ப்பு நூல்களையும் எழுதி வருகிறார்.

  • தெலுங்கு இலக்கிய வரலாறு
  • குஞ்ஞுண்ணி கவிதைகள் (மலையாள மொழிபெயர்ப்பு நூல்)
  • இந்திய ஒப்பிலக்கியம்
  • மனித இயந்திரம் (மலையாள நாவல் மொழிபெயர்ப்பு)
  • தமிழ் ஆராய்ச்சி வரலாற்றில் மார்க்சிய பேரொளி கா. சிவத்தம்பி
  • புலம் பெயர்ந்தோர் பனுவல்களும் மதிப்பீடுகளும்
  • தமிழ்ச் செவ்விலக்கியங்கள் மீள் வாசிப்பு
  • தனிநாயக அடிகளாரின் ஒப்பிலக்கியச் சிந்தனைகள்

விருதுகள்

தொகு

உசாத்துணைகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பா._ஆனந்தகுமார்&oldid=3340183" இலிருந்து மீள்விக்கப்பட்டது