பிஃட்சிங்கெர் வினை
பிஃட்சிங்கெர் வினை (Pfitzinger reaction) என்பது ஐசாட்டினுடன் ஒரு காரம் மற்றும் ஒரு கார்பனைல் சேர்மத்தைச் சேர்த்து வினைபுரியச் செய்து பதிலீடு செய்யப்பட்ட குயினோலின்-4-கார்பாக்சிலிக் அமிலங்களைத் தயாரிக்கக் கூடிய வேதி வினையாகும். பிஃட்சிங்கெர் போர்செ வினை என்ற பெயராலும் இவ்வினை அழைக்கப்படுகிறது [1][2]
.
இவ்வினை குறித்த பல விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளன [3][4][5]
வினை வழிமுறை
தொகு.
ஐசாட்டினுடன் பொட்டாசியம் ஐதராக்சைடு போன்ற ஒரு காரம் வினைபுரியும்போது அமைடு பிணைப்பானது கீட்டோ அமிலத்தைக் கொடுக்கிறது 2. இந்த இடைநிலையை தனித்துப் பிரிக்க இயலும். ஆனால் இதை குறிப்பாகத் தனித்து பிரிப்பதில்லை. ஒரு கீட்டோன் அல்லது ஆல்டிகைடு அனிலினுடன் வினைபுரிந்து இமீன் 3 மற்றும் ஈனமீன் 4 உருவாகின்றன. இந்த ஈனமீன் வளையமாகி நீர் மூலக்கூறை இழந்து தேவையான குயினோலினைக் கொடுக்கிறது. 5
மாறுபாடு
தொகுஆல்பெர்க்கான் மாறுபாடு
தொகுஎன்-அசைல் ஐசாட்டின் மற்றும் ஒரு காரம் வினைபுரிந்து 2-ஐதராக்சி-குயினோலின்-4-கார்பாக்சிலிக் அமிலங்களைக் கொடுக்கிறது[6]
இவற்றையும் காண்க
தொகு- கேம்ப்சு குயினோலின் தொகுப்பு
- பிரீட்லேன்டர் தொகுப்புவினை
- நைமெண்டோவ்சுகி குயினோலின் தொகுப்புவினை
- தால்னெடண்டு, சின்கோகெய்ன்
மேற்கோள்கள்
தொகு- ↑ Pfitzinger, W. (1886). "Chinolinderivate aus Isatinsäure" (in German). J. Prakt. Chem. 33 (1): 100. doi:10.1002/prac.18850330110.
- ↑ Pfitzinger, W. (1888). "Chinolinderivate aus Isatinsäure" (in German). J. Prakt. Chem. 38 (1): 582-584. doi:10.1002/prac.18880380138.
- ↑ Manske, R. H. (1942). "The Chemistry of Quinolines.". Chem. Rev. 30 (1): 113–144. doi:10.1021/cr60095a006.
- ↑ Bergstrom, F. W. (1944). "Heterocyclic Nitrogen Compounds. Part IIA. Hexacyclic Compounds: Pyridine, Quinoline, and Isoquinoline". Chem. Rev. 35 (2): 77–277. doi:10.1021/cr60111a001.
- ↑ Shvekhgeimer, M. G.-A. (2004). "The Pfitzinger Reaction". Chem. Heterocycl. Compd. 40 (3): 257–294. doi:10.1023/B:COHC.0000028623.41308.e5.)
- ↑ Halberkann, J. (1921). "Abkömmlinge der Chininsäure" (in German). Chem. Ber. 54 (11): 3090-3107. doi:10.1002/cber.19210541118.