பிகோனியா
பிகோனியா அகொனிடிஃபோலியா
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பிகோனியா

இனங்கள்

Selected species:

  • Begonia auriculata Hook.
  • Begonia fusicarpa Irmsch.
  • Begonia macrocarpa Warb.
  • Begonia mannii Hook.f.
  • Begonia oxyloba Welw. ex Hook.f.

பிகோனியா என்பது அறிவியல் வகைப்பாட்டு அடிப்படையில், பிகோனியேசியே (Begoniaceae) குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பூக்கும் தாவரப் பேரினம் ஆகும். இக் குடும்பத்தில் இரண்டு சாதிகள் மட்டுமே உள்ளன. சிம்பிகோனியா சாதி இப்பொழுது பிகோனியாவுக்குள் சேர்க்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 1500 இனங்களை உள்ளடக்கிய பிகோனியா மிகப் பெரிய பத்துப் பூக்கும் தாவரச் சாதிகளுள் ஒன்றாகும்.

இவற்றிற் பல, வெள்ளை, இளஞ் சிவப்பு, மஞ்சள் போன்ற பல்வேறு நிறங்களிலான கவர்ச்சிகரமான பூக்கள், அழகிய இலைகள் போன்றவற்றைக் கொண்டிருப்பதால் இச் சாதியைச் சேர்ந்த பெருமளவிலான இனங்களும், கலப்பினங்களும் பயிரிடப்பட்டு வருகின்றன. இச் சாதியைச் சேர்ந்த இனங்கள் வெவ்வேறு கண்டங்களில் இருந்து வந்தாலும் கூட அவையனைத்தையும் ஒன்றுடன் ஒன்று சேர்த்துக் கலப்பினங்களை உருவாக்க முடிவது இந்தச் சாதிக்குரிய சிறப்பியல்பாகும். இதனால் இச் சாதியில் ஏராளமான கலப்பின வகைகள் காணப்படுகின்றன. அமெரிக்க பிகோனியாச் சங்கம் பிகோனியாக்களைப் பல்வேறு குழுக்களாக வகைப்படுத்தியுள்ளது. இவ் வகைப்பாடு, பிரம்பு வகை (cane-like), செடிவகை (shrub-like), குமிழ்த் தாவரவகை, கிழங்குத்தாவர வகை, தடித்த தண்டு கொண்டவை போன்ற அடிப்படையில் அமைந்துள்ளன. பெரும்பாலும் இவ் வகைப்பாடு முறையான அறிவியல் வகைப்பாட்டுடன் பொருந்துவதில்லை. சில கலப்பினங்கள் பல குழுக்களுக்குரிய இயல்புகளைக் கொண்டிருப்பதுடன், சில எந்தக் குழுவுக்குமே பொருந்திவராத நிலையும் உள்ளது.

பயிரிடுதல்

தொகு

பயிரிடுதல் தொடர்பில் வேறுபட்ட பிகோனியாக் குழுக்களுக்கு வெவ்வேறுவகை நிலைமைகள் தேவைப்படுகின்றன. ஆனால், பல பிகோனியா இனங்கள் வெப்ப வலயப் பகுதிகளைச் சேர்ந்தவை ஆதலால், இவ்வினங்களும், அவற்றின் கலப்பினங்களும் பொதுவாக இள வெப்பச் சூழ்நிலைகளில் சிறப்பாக வளர்கின்றன. பொதுவாக இவை காடுகளில் மரங்களுக்கு அடியில் வளரும் தாவரங்களாக இருப்பதனால், இவை வளர்வதற்கு நிழல் தேவைப்படுகின்றது. கூடிய வெப்பப் பகுதிகளில் உள்ள சில இனங்கள் முழுமையான சூரிய ஒளியையும் கூடத் தாங்கி வளரக்கூடியவையாக உள்ளன. பொதுவாக பிகோனியாக்களுக்கு, தொடர்ச்சியாக ஈரலிப்பாகவோ அல்லது முழுமையாக வரண்டுபோகும் தன்மையோ இல்லாத ஆனால், இலகுவாக நீர் வடியக்கூடிய வளர்ச்சி ஊடகம் தேவை. பெரும்பாலான பிகோனியாக்கள் ஆண்டு முழுதும் வளரவும், பூக்கவும் கூடியன எனினும், குமிழ் வகைப் பிகோனியாக்களுக்கு உறக்கநிலைக் காலம் உள்ளது. இக் காலத்தில் குமிழ்களைக் குளிர்ச்சியாக வறண்ட சூழலில் சேமித்து வைக்கலாம்.

செம்பஃபுளோரன்ஸ் குழுவைச் சேர்ந்த பிகோனியாக்கள் பெரும்பாலும் படுக்கைத் தாவரங்களாக (bedding plants) வெளியில் வளர்க்கப்படுகின்றன. குமிழ் வகைப் பிகோனியாக்கள் பூஞ்சாடிகளிலேயே பெரிதும் வளர்க்கப்படுகின்றன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகோனியா&oldid=3932054" இலிருந்து மீள்விக்கப்பட்டது