பிக்குமிக்கள்
இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ [[:பிக்மி இனம்|பிக்மி இனம்]] உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
பிக்குமிக்கள்
ஆப்பிரிக்கக் கண்டத்தில் உள்ள பெல்சியக் காங்கோவானது மிகுவெப்ப மழைக்காட்டுப் பகுதி ஆகும். இங்கே வாழும் நாடோடி பழங்குடியினர் `பிக்குமிக்கள்’ என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் 3க்ஷ் வடக்குக் கிடைக்கோட்டிற்கும், 3க்ஷ் தெற்குக் கிடைக்கோட்டிற்கும் இடையேயுள்ள பகுதியில் வாழ்கின்றனர். வேட்டை கிடைக்கும் இடமே பிக்குமிக்களின் வாழ்விடம் இவர்கள் 2 மீட்டர் உயரமும், 1 மீட்டர் விட்டமும் கொண்ட மண்ணாலான வீடுகளைக் கட்டுகின்றனர். கூரை இழைகளால் வேயப்படுகிறது. ஒரு குடியிருப்பில் 10-30 வீடுகள் இருக்கிறது. இடுப்பிற்கு மட்டும் மர இலைகளை உடையாகப் பயன்படுத்துகின்றனர். மட்பானைகள், சுரைக்குடுக்கைகள், குத்தீட்டி, வில், அம்பு போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். இலைநஞ்சு தடவிய அம்புகளை வேட்டைக்குப் பயன்படுத்துகின்றனர். கிழங்கு, காளான், பட்டாணி, வாழை, காய், கனி, இறைச்சி போன்றவை இவர்களுடைய உணவு ஆகும். இவர்கள் உடல் வலிமையும், அஞ்சா நெஞ்சமும் படைத்தவர்கள். இவர்களிடம் சாதி, மதம், சட்டம், மூடப்பழக்க வழக்கங்கள் எதுவும் இல்லை. இவர்கள் வேட்டைத் தலைவனைப் பின்பற்றி இடம் பெயர்வார்கள்.
- ↑ மணிமேகலைகணேசன் (1974). தமிழ்நாட்டில் ஊர்சுற்றிகள். இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்ற ஆறாவது கருத்தரங்கு ஆய்வுக்கோவை, பாண்டிச்சேரி, தாகூர் அரசினர் கலைக்கல்லூரித் தமிழ்த்துறைச் சார்பு வெளியீடு. பக்க எண்கள். 908-913.