பிங்கி விராணி
பிங்கி விராணி (Pinki Virani) (பிறப்பு 30 சனவரி 1959) ஓர் இந்திய எழுத்தாளரும், பத்திரிகையாளரும், மனித உரிமை ஆர்வலரும் ஆவார். ஒன்ஸ் வாஸ் பாம்பே என்ற நூலையும், [1] அருணாஸ் ஸ்டோரி, பிட்டர் சாக்லேட்: சைல்ட் செக்சுவல் அப்யூஸ் இன் இண்டியா (இது தேசிய விருதை வென்றது), [2] டெப் ஹெவன் ஆகிய புத்தகங்களையும் எழுதியுள்ளார். [3] பாலிடிக்ஸ் ஆஃப் தி வோம்ப் - தி பெரில்ஸ் ஆஃப் ஐவிஎஃப், சரோகசி & மாடிபைடு பேபிஸ் என்பது இவரது ஐந்தாவது புத்தகமாகும். [4]
பிங்கி விராணி | |
---|---|
பிறப்பு | 1959 (அகவை 64–65) மும்பை, இந்தியா |
தொழில் | பத்திரிகையாளர், எழுத்தாளர் |
துணைவர் | சங்கர் ஐயர் |
ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்
தொகுவிரானி மும்பையில் 30 சனவரி 1959 இல் குசராத்தி முஸ்லிம் பெற்றோருக்கு பிறந்தார். இவரது தந்தை ஒரு கடை வைத்திருந்தார். இவரது தாய் ஒரு ஆசிரியர் ஆவார். இவர் மும்பை, புனே, முசோரி ஆகிய இடங்களில் பள்ளியில் பயின்றார். ஆகா கான் அறக்கட்டளையின் உதவித்தொகையுடன் பத்திரிகைத் துறையில் முதுகலைப் படிப்பதற்காக அமெரிக்கா சென்றார். இவர் தி சண்டே டைம்ஸில் பணியாற்றினார். அங்கு இவர் பிரித்தனில் நடந்த இனக் கலவரங்கள் குறித்து விரிவாக எழுதினார்.
தொழில்
தொகுஇவர் 18 வயதில் தட்டச்சராகப் பணி செய்யத் தொடங்கினார். புலமைப்பரிசிலுக்குப் பிறகு இவர் இந்தியாவுக்குத் திரும்பி ஒரு நிருபராகப் பணிபுரிந்தார். மேலும் ஒரு மாலைப் பத்திரிக்கையில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரானார். இவர் தனது முதல் புத்தகத்தை வெளியிடவேண்டி தினசரி பத்திரிகையிலிருந்து வெளியேறினார்.
அருணா ஷான்பாக் வழக்கு
தொகு1973 நவம்பர் 27 அன்று மும்பையின் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர் அருணா ஷான்பாக் என்பவர் ஒரு துப்புரவாளரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். அவர் சார்பாக இந்திய உச்சநீதிமன்றத்தில் 2009 ஆம் ஆண்டு, பிங்கி விராணி ஒரு மனுவை தாக்கல் செய்தார். தாக்குதலின் போது, ஷான்பாக் ஒரு சங்கிலியால் கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்யப்பட்டர். இதனால் பாதிக்கப்பட்டு கேஇஎம் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த அவர் 2015 ஆம் ஆண்டில் நிமோனியாவால் இறக்கும் வரை 48 ஆண்டுகளாக உணவுக் குழாய் மூலம் உயிருடன் இருந்தார். விராணியின் 2009 மனுவில், "அருணாவின் தொடர்ச்சியான இருப்பு கண்ணியமாக வாழ்வதற்கான அவரது உரிமையை மீறுவதாகும்" என்று வாதிட்டார். உச்சநீதிமன்றம் தனது முடிவை 7 மார்ச் 2011 அன்று அளித்தது. அருணாவின் மூச்சை நிறுத்துவதற்கான வேண்டுகோளை அது நிராகரித்தது. ஆனால் இந்தியாவில் செயலற்ற கருணைக்கொலை சட்டப்பூர்வமாக்கும் பரந்த வழிகாட்டுதல்களை வெளியிட்டது. [5]
தனிப்பட்ட வாழ்க்கை
தொகுஇவர் ஒரு பத்திரிகையாளரும், ஆக்சிடெண்டல் இந்தியாவின் ஆசிரியருமான சங்கர் அய்யரை மணந்தார். [6]
நூலியல்
தொகு- Aruna's Story: the true account of a rape and its aftermath. Viking, 1998.
- Bitter Chocolate: child sexual abuse in India, Penguin Books, 2000
- Once was Bombay. Viking. 1999. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-670-88869-9.
- Deaf Heaven, HarperCollins Publishers India, 2009. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7223-849-5.
- Politics Of The Womb—The Perils Of IVF, Surrogacy & Modified Babies, Penguin Random House, 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0670088720
மேற்கோள்கள்
தொகு- ↑ Once was Bombay.
- ↑ "Theatre tribute to Aruna Shanbaug". https://www.thehindu.com/news/national/theatre-tribute-to-aruna-shanbaug/article7500017.ece.
- ↑ "As we see ourselves" இம் மூலத்தில் இருந்து 29 ஜூன் 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110629052333/http://www.hindu.com/mag/2009/07/19/stories/2009071950040200.htm.
- ↑ "The Egg Commerce". Daily Pioneer. 25 September 2016.
- ↑ "Supreme Court decision on Aruna Ramachandra Shanbaug versus Union of India" (PDF). Supreme Court of India. Archived from the original (PDF) on 10 January 2017. பார்க்கப்பட்ட நாள் 11 September 2016.
- ↑ . 1 August 2009.