பிசிர் (ஊர்)

பிசிர் என்பது சங்ககாலத்தில் பாண்டிய நாட்டில் இருந்த ஓர் ஊர்.
பிசிர் என்பது கடலலையால் வீசப்படும் நீர்த்திவலைகளைக் குறிக்கும். எனவே இந்த ஊர் கடற்கரை ஓரமாக இருந்த ஊர் எனத் தெரிகிறது.
எனினும் இந்த ஊரை முல்லைநிலப் பகுதியாகக் கோப்பெருஞ்சோழன் பாடல் குறிப்பிடுகிறது. இவ்வூர் மக்கள் வரகரிசிச் சோற்றில் தயிர் ஊற்றி உண்ணும்போது வேளைக்கீரைப் பொறியலைச் சேர்த்துக்கொண்டு உண்பார்களாம். வரகரிசிப் புளிக் கட்டுச்சோற்றை உண்ணும்போது அவரைக்காய்ப் பொறியலையும் சேர்த்து உண்பார்களாம்.

இந்த ஊரில் வாழ்ந்த புலவர் பிசிராந்தையார். இந்தப் புலவரின் பொயர் ஆந்தையார். ஆதன் தந்தை என்பது ஆந்தை என மருவும் எனத் தொல்காப்பியம் கூறுகிறது. [1] இதனால் இந்தப் புலவரின் மகன் ஆதன் எனத் தெரிகிறது. பிசிராந்தையார் கோப்பெருஞ்சோழனின் நண்பர். ‘தென்னம் பொருப்பன் நன்னாட்டுள்ளும் பிசிரோன் என்ப என் உயிர் ஓம்புநனே’ எனக் கோப்பெருஞ்சோழன் தன் நண்பன் பிசிராந்தையாரைப் பற்றிக் குறிப்பிடுகிறான். [2]

அடிக்குறிப்பு

தொகு
  1. தொல்காப்பியம் புள்ளிமயங்கியல் னகர ஈறு
  2. புறநானூறு 215.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசிர்_(ஊர்)&oldid=903999" இலிருந்து மீள்விக்கப்பட்டது