பிச்சாம்பு ஒடுக்கம்
பிச்சாம்பு ஒடுக்கம் (Bechamp reduction) என்பதுஅரோமாட்டிக் நைட்ரோ சேர்மங்களை இரும்பு மற்றும் ஐதரோகுளோரிக் அமிலத்தைப் பயன்படுத்தி அவற்றுடன் தொடர்புடைய அனிலின் களாக ஒடுக்கமடையச் செய்யும் வினையாகும்[1]
.
தொழில்முறையில் அனிலீன்களைப் பெருமளவில் தயாரிப்பதற்கு பிச்சாம்பு ஒடுக்க வினை முதலில் பயன்படுத்தப்பட்டது.ஆனால் வினையூக்க ஐதரேசனேற்ற முறையே பரிந்துரைக்கப்படுகிறது[2]. இரும்பு ஆக்சைடு நிறமிகள் தயாரிப்பதற்கான வழிமுறையாக பிச்சாம்பு வினை கருதப்பட்டது[3]
அன்டோயின் பிச்சாம்பு 1854 இல் முதலில் நைட்ரோநாப்தலீன் மற்றும் நைட்ரோபென்சீன்களை ஒடுக்குவதற்காக இவ்வினையைப் பயன்படுத்தினார் [4]
வினை எல்லைகள்
தொகுபிச்சாம்பு வினை பரவலாக அரோமாட்டிக் நைட்ரோ சேர்மங்களுக்கு பொருத்தமாக உள்ளது. அலிபாட்டிக் நைட்ரோ சேர்மங்களை ஒடுக்குவது மிகவும் கடினமாக இருக்கும். பெரும்பாலும் இவை ஐதராக்சிலமீனாக எஞ்சியிருக்கும். மூவிணைய அலிபாட்டிக் நைட்ரோ சேர்மங்கள் பிச்சாம்பு ஒடுக்க வினையைப் பயன்படுத்தி அமீன் சேர்மங்களைக் கொடுக்கின்றன[5].
மேற்கோள்கள்
தொகு- ↑ Org React 2, 428 (1944).
- ↑ McKetta, John J. (1989). "Nitrobenzene and Nitrotoluene". Encyclopedia of Chemical Processing and Design: Volume 31 - Natural Gas Liquids and Natural Gasoline to Offshore Process Piping: High Performance Alloys. CRC Press. pp. 166–167. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-2481-8.
- ↑ Thomas Kahl, Kai-Wilfrid Schröder, F. R. Lawrence, W. J. Marshall, Hartmut Höke, Rudolf Jäckh "Aniline" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry 2007; John Wiley & Sons: New York.எஆசு:10.1002/14356007.a02_303
- ↑ Béchamp, Antoine (1854). "De l'action des protosels de fer sur la nitronaphtaline et la nitrobenzine. nouvelle méthode de formation des bases organiques artificielles de Zinin". Annales de chimie et de physique 42: 186–196. http://gallica.bnf.fr/ark:/12148/bpt6k347830.image.f185.
- ↑ M. J. Leonard; A. R. Lingham; J. O. Niere; N. R. C. Jackson; P. G. McKay; H. M. Hϋgel (6 Mar 2014). "Alternative synthesis of the anti-baldness compound RU58841". RSC Advances 4: 14143–14148. doi:10.1039/c4ra00332b.