பிஜூனஸ்அப்ஸ்
பிஜூனஸ்அப்ஸ் எனப்படுவது மிக வரைந்து நகர்பேசிகளுக்கான செயலிகளை உருவாக்க உதவும் ஒரு தளமாகும். இந்தத் தளத்தின் மூலம் நகர்பேசி செயலிக்குத் தேவையான பயன்படாடுகளை இலகுவாக இணைத்துக்கொள்ளலாம் அல்லது நீக்கிக்கொள்ளலாம். இவை அனைத்தையும் செய்வதற்கு எந்தவித கணனி மொழி அறிவும் தேவையில்லை என்பது குறிப்பிடத் தக்கது.
வலைத்தள வகை | இணையம் சார் நகர்பேசி செயலிஉருவாக்கி |
---|---|
தோற்றுவித்தவர் | அன்ரூ கஸூடெக்கி [1] |
தலைமைச் செயலர் | அன்ரூ கஸூடெக்கி |
மகுட வாசகம் | "Mobile apps for business made easy" |
வெளியீடு | 2011 |
தற்போதைய நிலை | இயங்குநிலையில் |
உரலி | biznessapps.com |
செயலி உருவாக்கப் பொறிமுறை
தொகுபிஜூனஸ்அப்ஸ் மூலம் செயலி ஒன்றை உருவாக்கும் போது முதலில் எந்தத் துறைக்கான செயலியை அமைக்கப் போகின்றோம் என்பதைத் தெரிவு செய்யவேண்டும். இதன் போது அந்தத் துறை சார்ந்த செயற்பாடுகளை தானே செயலியில் பிஜூனஸ்அப்ஸ் இணைத்துக் கொள்ளும். இதன் பின்னர் செயலியை உருவாக்குபவர் மேலதிக செயற்பாடுகளை இணைத்துக் கொள்ளலாம் அல்லது இருக்கும் செயற்பாடுகளை இணைத்துக் கொள்ளலாம். பின்வரும் செயற்பாடுகளை தற்போது பிஜூனஸ்அப்ஸ் செயலிகளில் வழங்கப்படுகின்றது[2].
- ஜிபிஎஸ் தொழில்நுட்பம் மூலம் பாதைகாட்டுதல்
- ஒரு தொடுகையில் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தும் பொத்தான்கள்
- சமூக வலைத்தளங்கள் மற்றும் ஏனைய ஊடகங்கள்மூலம் செயலி பற்றி பரப்புரை செய்தல்
- இணையத்தின் உதவியுடன் உணவுவிடுதிகள் உணவை விற்கும் செயல்
- நகர்பேசி சார் வியாபாரக் கூடை
- நகர்பேசி மூலம் முன்பதிவுகள் செய்தல் (மேசை முன்பதிவு அல்லது ஒருவருடன் சந்திப்பிற்கான முன்பதிவு)
- இசையை இசைக்கும் நீட்சி
- வாடிக்கையாளர் தொடர்புகொள்ள மின்னஞ்சல்படிவம்
- உண்மையான வாடிக்கையாளரிற்கு விஷேட சலுகைகளை வழங்கக்கூடிய இயல்பு
- சமூக வலைத்தள இணைப்பு
- நிழ்வுகள் பற்றிய அறிவித்தல்
- தொடர்பு கொள்ள வேண்டியபோது அதற்கான விடையங்கள் அறிந்துகொள்ளக்கூடிய பக்கம்
- படிம காட்சியகம்
- Push முறையில் அமைந்த செய்திகளை அனுப்புதல்
போன்ற மேலும் பல செயற்பாடுகளை கொண்டமைந்துள்ளது.
நகர்பேசி இயங்குதள ஆதரவு
தொகுபிஜூனஸ்அப்ஸ் தற்போது ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் இயங்குதளங்களை ஆதரிக்கின்றது. ஆண்ட்ராய்டுடிற்கான செயலி இணையத்தளத்தில் செயலியை செய்து முடித்ததும், செய்தவரின் மின்னஞ்சல் முகவரிக்கு ஆண்ட்ராய்டு செயிலியின் ஏபிகே அனுப்பி வைக்கப்படும். அதே வேளை ஐஓஎஸ் செயலி இவ்வாறு மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்படுவதில்லை. மாறாக பிஜூனஸ்அப்ஸ் நிருவாகிகள் உங்கள் அப்பிள் ஐடியூன்ஸ் கணக்கில் உங்கள் சார்பாகப் பதிவேற்றித் தருவர். இதைவிட இணைய உலாவிகளில் பாவிக்கக்கூடிய எச்டிஎம்எல் 5 செயலியும் இலவசமாக வழங்கப்படும்.
கட்டண விபரம்
தொகுதற்போது நகர்பேசி இணையம் சார் செயலி ஒன்றைச் செய்ய சுமார் 29 அமெரிக்க டாலர்களும், நகர்பேசிச் செயலி ஒன்றைச் செய்ய 59 அமெரிக்க டாலர்களும் அறவிடப்படுகின்றது [3]. மூன்றாம் நபர்களுக்கு பிஜூனஸ்அப்ஸ் மூலம் செயலிகளை செய்து விற்பனை செய்பவர்கள் இந்த செயலிகள் பிஜூனஸ்அப்ஸ் மூலம் செய்ய்யபட்டது என்பதை அறிவிக்காமல் மீள் வியாபாரம் செய்வதையும் பிஜூனஸ்அப்ஸ் ஊக்குவிக்கின்றது. இவ்வாறு மீள்விற்பனை செய்பவர்களை பிஜூனஸ்அப்ஸ் வைட் லேபிள் எனும் செயற்றிட்டம் மூலம் சேவைகளை வழங்குகின்றது. இந்த வைட் லேபிள் முறையில் செயலிகளை மீள் விற்பனை செய்பவர்கள் பிஜூனஸ்அப்ஸ் போன்ற தளம் ஒன்றை அமைத்துக் கொள்ளவும் பிஜூனஸ்அப்ஸ் நிறுவனம் வழிசமைத்துக் கொடுக்கின்றது.