பிஜூஸ் அசாரிகா
இந்திய அரசியல்வாதி
பிஜூஷ் அசாரிகா (Pijush Hazarika) அசாமைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி அரசியல்வாதி ஆவார்.[4] இவர் 2011 முதல் அசாம் சட்டப் பேரவை உறுப்பினராக உள்ளார்.[5] 2011 இல் அசாம் சட்டப் பேரவைத் தேர்தலில் இராகா தொகுதியிலிருந்தும், 2016 மற்றும் 2021 இல் ஜாகிரோடு தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[6][7]
பிஜூஷ் அசாரிகா | |
---|---|
2017 இல் பிஜூஷ் அசாரிகா | |
அசாம் அரசின் அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 24 May 2016 | |
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் மே 2016 | |
தொகுதி | ஜாகிரோடு |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 17 சூன் 1977[1] இராகா, நகோன், அசாம் |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி (2015–தற்போது வரை) |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு (2011–2015 வரை) |
துணைவர் | ஐமி பருவா (தி. 2011) [2] |
பிள்ளைகள் | 2 |
வாழிடம்(s) | இராகா, நகோன், அசாம்[3] |
கல்வி | இளங்கலை பட்டம் |
தொழில் | அரசியல்வாதி , மீன் பண்ணை |
மூலம்: [1] |
சொந்த வாழ்க்கை
தொகுபிஜுஷ் அசாரிகா, அசாமின் நகோன் மாவட்டத்தில் உள்ள மோரிகானில் உள்ள அகுத்குரியில் மறைந்த சிசுராம் அசாரிகா மற்றும் பிரமிளா அசாரிகா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இவர் கௌகாத்தியில் உள்ள ஆர்ய வித்யாபீடக் கல்லூரியில் இளங்கலை பட்டம் பெற்றார். [8]
அக்டோபர் 1, 2011 அன்று, அசாரிகா நடிகை ஐமி பருவா என்பவரை மணந்தார். [9] இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். [10]
சர்ச்சை
தொகு- பிஜூஷ் அசாரிகா தனது மனைவி ஐமி பருவா தொடர்பான செய்தியை ஒளிபரப்பியதற்காக பிரதிதின் டைம் என்ற செய்தி நிறுவனத்தின் பத்திரிகையாளரை மிரட்டியதாக அமைச்சர் பிஜூஷ் அசாரிகாவின் பேச்சு ஒன்று பரபரப்பாகி வருகிறது.[11][12]
- கோவிட் சகாப்தத்தில் ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மாவின் குடும்பம் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நீர்வளம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சர் பிஜூஷ் அசாரிகா பதிலளித்தார்.[13]
- அசாமின் மாநில அமைச்சரான பிஜூஷ் அசாரிகா, கோல்பாரா மாவட்டத்தில் மியா அருங்காட்சியகம் கட்டப்படுவதை கடுமையாக எதிர்த்தார். அவ்வாறு செய்வது அசாமிய கலாச்சாரத்தை சூறையாடுவதற்கு சமம் என்று கூறினார். [14]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Who's who Pijush Hazarika".
- ↑ "Guwahati Press Club condemns BJP leader Pijush Hazarika for intimidating journalist".
- ↑ "PIJUSH HAZARIKA (Winner) JAGIROAD (SC) (MARIGAON)".
- ↑ Desk, Sentinel Digital (2021-03-30). "Pijush Hazarika from Jagiroad: Early Life, Controversy & Political Career - Sentinelassam". www.sentinelassam.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-26.
- ↑ Network, L. I. (2021-11-30). "PIJUSH HAZARIKA". Law Insider India (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-26.
- ↑ "Pijush Hazarika | Assam Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2022-07-26.
- ↑ "Jagiroad Election Result 2021 LIVE: Jagiroad MLA Election Result & Vote Share - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-26.
- ↑ "Know Your New Minister Pijush Hazarika". 26 April 2018.
- ↑ "Who's Who". பார்க்கப்பட்ட நாள் 6 June 2020.
- ↑ "Aimee Baruah shares adorable picture with son, daughter" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-07-12.
- ↑ "Gauhati Press Club slams Assam minister Pijush Hazarika for "threatening" TV journalist". NORTHEAST NOW (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 April 2021.
- ↑ Singh, Abhilash. "Guwahati Press Club condemns BJP leader Pijush Hazarika for intimidating journalist". EastMojo (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 1 April 2021.
- ↑ "Controversy of 'COVID corruption' involving CM's family is completely baseless: Pijush Hazarika". India Today NE (in ஆங்கிலம்). 2022-06-04. பார்க்கப்பட்ட நாள் 2022-10-26.
- ↑ "Stealing Assamese culture and keeping in Miya museum cannot be accepted: Minister Pijush Hazarika". India Today NE (in ஆங்கிலம்). 2022-10-25. பார்க்கப்பட்ட நாள் 2022-10-26.