பிதுபர் பெண்கள் பட்டயக் கல்லூரி

பிதுபர் பெண்கள் பட்டப்படிப்பு கல்லூரி, என்பது அசாம் மாநிலத்திலுள்ள திப்ருகர் மாவட்டத்தில் உள்ள கோவாங் என்ற இடத்தில் 1989 ஆண்டில் நிறுவப்பட்ட ஒரு பெண்களுக்கான பொது பட்டப்படிப்பு கல்லூரியாகும். இந்தக் கல்லூரி திப்ருகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. [1] இந்தக் கல்லூரியில் கலை மற்றும் வணிகத்தில் இளங்கலை பட்டப்படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

பிதுபர் பெண்கள் பட்டயக் கல்லூரி
வகைபொது
உருவாக்கம்09-ஆகஸ்டு-1989
அமைவிடம்
கோவாங், திப்ருகார்
, ,
சேர்ப்புதிப்ருகார் பல்கலைக்கழகம்
இணையதளம்http://pithubarcollege.org/index.html

வரலாறு

தொகு

அசாமிய சமூகத்தின் ஏழை மற்றும் பின்தங்கிய தேயிலைத் தோட்ட மாணவர்களுக்கு உயர் கல்வி வசதிகளை வழங்குவதற்காக இக்கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தனது சொந்த நிலத்தையும் கல்லூரிக்கான கட்டிடத்தையும் நன்கொடையாக வழங்கிய மரியாதைக்குரிய சமூக சேவகர், கல்வியாளர் மற்றும் துலியாபம் தேயிலைத் தோட்டத்தின் உரிமையாளரான 'பிதுபர் என்பவரின் பெயரிராலேயே இக்கல்லூரி பெயரிடப்பட்டுள்ளது.[2]

இந்த கல்லூரி திப்ருகர் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது அத்தோடு 2010 ஆம் ஆண்டில் பல்கலைக்கழக மானியக் குழுவின் 2 (எஃப்) இன் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

துறைகள்

தொகு
  • அசாமி
  • ஆங்கிலம்
  • வரலாறு
  • கல்வி
  • அரசியல் அறிவியல்
  • சமூகவியல் மற்றும்
  • பொருளாதாரம் ஆகிய துறைகளில் இளங்கலைப் பாடங்கள் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. மேலும் என்.சி.சி படிப்பு, இரண்டு ஆண்டு மேல்நிலைப் படிப்பு (KKHSOU), மூன்று ஆண்டு பட்டப்படிப்பு (KKHSOU), D. El .Ed. பாடநெறி (KKHSOU) ஆகியவைகளையும் தொலைதூரக் கல்வி (பி.ஏ.) வழியில் தொலைதூரக் கல்வி ஆய்வு மையத்தின் கீழும் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Affiliated College of Dibrugarh University". Archived from the original on 2020-05-11. பார்க்கப்பட்ட நாள் 2024-02-03.
  2. "பிதுபர் பெண்கள் டிகிரி கல்லூரிக்கு வரவேற்கிறோம்".

வெளி இணைப்புகள்

தொகு