பித்தகோரியன்
கிரேக்கத்தின் சாமோஸ் தீவில் உள்ள பண்டைய கோட்டை
பித்தகோரியன் (Pythagoreion) என்பது கிரேக்க நாட்டின், சாமோஸ் தீவில் உள்ள பண்டைய நகரமான சமோசின் தொல்லியல் தளமாகும். இது நவீன நகரமான பித்தகோரியோ பகுதியில் அமைந்துள்ளது, அதிலிருந்து இதன் நவீன பெயர் வந்தது.
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம் | |
---|---|
பித்தகோரியோவில் உள்ள பழங்கால கோட்டை சுவர்கள் | |
அமைவிடம் | சாமோஸ், கிரேக்கம் (நாடு) |
பகுதி | Pythagoreion and Heraion of Samos |
கட்டளை விதி | பண்பாட்டுக் களம்: (ii)(iii) |
உசாத்துணை | 595-001 |
பதிவு | 1992 (16-ஆம் அமர்வு) |
பரப்பளவு | 285.9 ha (706 ஏக்கர்கள்) |
Buffer zone | 402.25 ha (994.0 ஏக்கர்கள்) |
ஆள்கூறுகள் | 37°41′27″N 26°56′36″E / 37.69083°N 26.94333°E |
இந்த தொல்லியல் தளத்தில் பண்டைய கிரேக்க மற்றும் உரோமானிய நினைவுச்சின்னங்கள் மற்றும் புகழ்பெற்ற பழங்கால சுரங்கப்பாதை, யூபலினோஸ் சுரங்கம் அல்லது யூபலினியன் நீர்வழி ஆகியவை உள்ளன. சாமோசின் எராயன் உடன் சேர்த்து பித்தகோரியன் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக 1992 இல் அறிவிக்கப்பட்டது.