சாமோஸ்

கிரேக்க தீவு

சாமோஸ் (Samos (/ˈsmɒs/,[1] also US: /ˈsæms, ˈsɑːmɔːs/;[2][3][4] கிரேக்க மொழி: Σάμος வார்ப்புரு:IPA-el) என்பது கிரேக்கத்தின் ஒரு தீவு ஆகும். இது கிழக்கு ஏஜியன் கடலில், சியோசுக்கு தெற்கே, பத்மோஸ் மற்றும் டோடகநிசுக்கு வடக்கேயும், மேற்கு துருக்கியின் கடற்கரையில் இருந்து சுமார் 1.6-கிலோமீட்டர் (1.0 mi) அகலமான மைக்கேல் ஜலசந்தியால் பிரிக்கபட்டுள்ளது. இது வடக்கு ஏஜியன் பிராந்தியத்தின் ஒரு தனி பிராந்திய அலகு மற்றும் பிராந்திய அலகின் ஒரே நகராட்சி ஆகும்.

சாமோஸ்
Σάμος
Samos (town), capital of Samos
Samos (town), capital of Samos
Samos within the North Aegean
Samos within the North Aegean
சாமோஸ் is located in கிரேக்கம்
சாமோஸ்
சாமோஸ்
ஆள்கூறுகள்: 37°45′N 26°50′E / 37.750°N 26.833°E / 37.750; 26.833
நாடு கிரேக்க நாடு
RegionNorth Aegean
தலைநகரம்சாமோஸ்
பரப்பளவு
 • மொத்தம்477.4 km2 (184.3 sq mi)
ஏற்றம்
1,434 m (4,705 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்32,977
 • அடர்த்தி69/km2 (180/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (EET)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைகால நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
831 xx
தொலேபேசி குறியீடு2273
Car platesMO
இணையதளம்www.samos.gr

பண்டைய காலத்தில், சமோஸ் செல்வ வளமிக்க மற்றும் சக்திவாய்ந்த நகர அரசாக இருந்தது. இதன் திராட்சைத் தோட்டங்கள் மற்றும் ஒயின் உற்பத்திக்கு பெயர் பெற்றது. [5] இது பழங்கால பொறியியல் அதிசயமான யூபாலினியன் நீர்வழியை உள்ளடக்கியது. மேலும் இது யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய களமான பித்தகோரியன் மற்றும் சாமோசின் எராயன் ஆகியவற்றின் அமைவிடமாகும். சாமோஸ் தீவானது கிரேக்க தத்துவஞானியும், கணிதவியலாளருமான பித்தகோரஸின் பிறப்பிடமாகும், அவரின் பெயராலேயே பித்தேகோரசு தேற்றம் அழைக்கப்படுகிறது. மெய்யிலாளர்களான சமோஸ் மற்றும் எபிகியூரசு மற்றும் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று முன்மொழிந்த முதல் நபரும் வானியலாளருமான சாமோசின் அரிசுட்டார்க்கசு ஆகியோர் சாமோசை சேர்ந்தவர்களாவர். சாமியான் ஒயின் பழங்காலத்தில் இருந்தே புகழ்பெற்றது. மேலும் இன்னும் இத்தீவில் தயாரிக்கப்படுகிறது.

1835 ஆம் ஆண்டு முதல் இந்த தீவு உதுமானியப் பேரரசின் ஆட்சியின் கீழ் அரை-தன்னாட்சி அதிபரால் நிர்வகிக்கப்பட்டது. இத்தீவு 1912 ஆம் ஆண்டு கிரேக்க நாட்டுடன் இணைக்கப்படும் வரை இந்நிலையே நீடித்தது. [5]

படக்காட்சியகம்

தொகு

குறிப்புகள்

தொகு
  1. "Samos". Oxford Dictionaries. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம். பார்க்கப்பட்ட நாள் 6 July 2019.
  2. "Samos". The American Heritage Dictionary of the English Language (5th ed.). Boston: Houghton Mifflin Harcourt. 2014. பார்க்கப்பட்ட நாள் 6 July 2019.
  3. "Samos". Collins English Dictionary. HarperCollins. பார்க்கப்பட்ட நாள் 6 July 2019.
  4. "Samos". Merriam-Webster Dictionary. பார்க்கப்பட்ட நாள் 6 July 2019.
  5. 5.0 5.1 Bunbury, Caspari & Gardner 1911, ப. 116.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாமோஸ்&oldid=3708890" இலிருந்து மீள்விக்கப்பட்டது