பிந்து அம்மினி

பிந்து அம்மினி (Bindu Ammini) வழக்கறிஞர், பேராசிரியர், பெண்ணியவாதி என பன்முகங்கள் கொண்ட ஓர் இந்தியப் பெண்மணியாவார். கேரளாவைச் சேர்ந்த இவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் நுழையும் முதல் இரண்டு பெண்களில் இவரும் ஒருவர் என்ற வகையில் முக்கியத்துவம் பெறுகிறார். இந்திய உச்ச நீதிமன்ற தீர்ப்பு அடிப்படையில் இனப்பெருக்க வயதுடைய பெண்கள் கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது.

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி

தொகு

கேரள மாநிலம் பத்தனம்திட்டாவைச் சேர்ந்தவர் பிந்து அம்மினி. [1] குடும்பத்தில் பிறந்த ஐந்து உடன்பிறப்புகளில் இவர் இளையவராவார். [2] இவருடைய அம்மா தன் தந்தையை விட்டு பிரிந்த பிறகு குழந்தைகள் தாயின் வருமையோடு சேர்ந்து வளர்ந்தனர்.[2] [3]

இந்த குடும்பத்தில் கல்லூரியில் சேரும் முதல் பெண்ணாக அம்மினி இருந்தார். [2] ஒரு மாணவராக இவர் மார்க்சிய பிரிவு பொதுவுடமைக் கட்சியில் மாணவர் பிரிவான கேரளா வித்யார்த்தி சங்கதனத்தில் [4] சேர்ந்தார். பொதுவுடமைக் கட்சியின் மார்க்சு பிரிவில் இளம் பெண் மாநில ஒருங்கிணைப்பாளர் என்ற சிறப்பும் அம்மினிக்கு கிடைத்தது. [2] டைம் பத்திரிகையின் கூற்றுப்படி இவர் இருந்த கட்சி அரசு அங்கீகாரம் பெற்றிருந்தது. ஆயுதக் கிளர்ச்சியை இவர் ஒருபோதும் நம்பவில்லை. 2011 ஆம் ஆண்டு அம்மினி கட்சியை விட்டு வெளியேறினார். [2] 2019 ஆம் ஆண்டில், அப்போதைய பொதுவுடமைக் கட்சியின் மார்க்சு பிரிவு தலைவர் மற்றும் உறுப்பினரான பி. யே. யேம்சு பத்து வருடங்களாக அம்மினி பொதுவுடமைக் கட்சியுடன் இணைக்கப்படவில்லை என்று கூறினார். [4]

அம்மினி சட்டத்தில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்கிறார். [4] [3]

தொழில்

தொகு

அம்மினி முன்னதாக கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார். கோயிலாண்டி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார், மேலும் கண்ணூர் பல்கலைக்கழகத்தின் தலசேரி வளாகத்தில் உள்ள சட்டப் பள்ளியில் உதவிப் பேராசிரியராக உள்ளார். [1] [4] கணவருடன் சேர்ந்து மளிகைக் கடையும் நடத்தி வருகிறார்.[2]

அம்மினி பீம் இராணுவத்தின் கேரள மாநிலத் தலைவராவார்.[5]

சபரிமலை நுழைவு

தொகு

சபரிமலை கோவிலுக்குள் பத்து முதல் ஐம்பது வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்கும் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு [6] ஆர்வலர்களால் உருவாக்கப்பட்ட சமூக ஊடகக் குழுக்களில் அம்மினி சேர்ந்தார். [2] கோவிலுக்குச் செல்ல விரும்பும் பெண்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட நவோதனா கேரளம் சபரிமலைக்கு (மறுமலர்ச்சி கேரளா) என்ற முகநூல் பக்கத்தில் இவர் கனகதுர்காவைச் சந்தித்தார். [4]

முதல் முயற்சி

தொகு

2018 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் நாளன்று அம்மினி, கனகதுர்கா மற்றும் வேறு இரண்டு பெண்கள், திருச்சூரில் சந்தித்து பின்னர் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். [2] பயணத்தின் போது மற்ற இரண்டு பெண்கள் பாதியிலேயே வெளியேறினர். டிசம்பர் மாதம் 24 ஆம் தேதியன்று அம்மினி மற்றும் கனகதுர்காவை போராட்டக்காரர்கள் தடுத்தனர். [2] [3] பின்னர் இவர்கள் காவல்துறை பாதுகாப்பு இல்லாததற்கு எதிர்ப்பு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். [2] [3]

இரண்டாவது முயற்சி

தொகு

2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 2 ஆம் தேதி அதிகாலை 3:45 மணியளவில் அம்மணி, கனக துர்காவுடன் சபரிமலை ஐயப்ப கோவிலுக்குள் நுழைந்தார். [7] அவர்கள் காவலர் உதவியுடன் கறுப்பு உடைகள் அணிந்து கோவிலுக்குள் விரைந்து செல்வதை பலர் கண்டனர். [7] அவர்களின் கோவில் நுழைவு காணொளிகள் ஆதரவு மற்றும் எதிர்ப்பின் செய்திகளுடன் இந்தியாவில் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன. [8] இவர்களின் கோவில் பிரவேசத்தை கேரள முதல்வர் பினராயி விசயன் உறுதி செய்தார் . [9] இவர்கள் கோயில் உள்ளே நுழைந்த பிறகு, அர்ச்சகர்கள் ஒரு சுத்திகரிப்பு விழாவுக்காக கோயிலை மூடினர். [2] [10]

சபரிமலையில் நுழைந்த பிறகு அம்மினி காவல்துறை பாதுகாப்பில் வைக்கப்பட்டார். [11] கோவிலுக்குள் வெற்றிகரமாக நுழைந்த பிறகு இவர் தலைமறைவாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. [12] [13] சபரிமலைக்குள் இவர் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சபரிமலை கர்ம சமிதி மற்றும் பிற அமைப்புகளால் இவரது வீட்டுக்கு முன்பாக எதிர்ப்பு தெரிவித்தனர். [1] பிப்ரவரி 2019 ஆம் ஆண்டு தனக்கு இன்னும் கொலை மிரட்டல்கள் வருவதாக அம்மினி கூறினார். [6]

அம்மினி பெண்ணிய நடவடிக்கைகளில் நம்பிக்கை கொண்டவராயிருந்தார். கீழ்ப்பட்டவர் ஒடுக்கப்பட்ட வர்க்கங்கள் பெண்கள் உரிமைக்காக குரல் கொடுக்க வேண்டும் என்கிறது இவருடைய பெண்ணியம். [2] கோவிலுக்குள் பெண்கள் நுழைவதற்கு எதிரான போராட்டம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று தான் நம்புவதாக அம்மினி கூறியுள்ளார். [14] "நாங்கள் பிரச்சனையைத் தொடங்க முயற்சிக்கவில்லை," மற்றும் "கோவிலைத் தரிசிப்பது மட்டுமே எங்கள் குறிக்கோளாக இருந்தது. அடுத்த தலைமுறை பெண்களுக்கு, இது ஓர் உந்துதல். என்று அம்மினி கூறியுள்ளார்.[3] பாரதீய சனதா கட்சியின் சில வின் சில உறுப்பினர்கள் இவர்களின் கோயொல் நுழைவை கருப்பு நாள் என்று அழைத்தனர். [11] உச்சநீதிமன்ற தீர்ப்பின் ஆதரவாளரான கேரள முதல்வர் பினராயி விசயன், அம்மினி மற்றும் கனககதுர்கா இருவரும் கோவிலுக்குள் நுழைவது ஒரு வரலாற்று தருணம் என்று கூறினார்.[10]

மூன்றாவது முயற்சி

தொகு

2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் தனது 2018 ஆம் ஆண்டு முடிவை செயற்படுத்தாமல் அமைதியாக வைத்திருந்தது. ஆனால் வழக்கை ஒரு பெரிய பெஞ்ச் விசாரிக்க பரிசீலனைக்கு முன்வந்தது.[15] உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் வரை கேரள அரசு கோவிலுக்குள் நுழையும் பெண்களுக்கான ஆதரவையும் காவல் பாதுகாப்பையும் திரும்பப் பெற்றது. [16] [17] இந்த அறிவிப்புக்குப் பிறகு, அம்மினி மற்றும் திருப்தி தேசாய் உள்ளிட்ட பிற ஆர்வலர்கள், நவம்பர் மாத இறுதியில் எர்ணாகுளம் நகர ஆணையர் அலுவலகத்திற்குச் சென்று, கோவிலுக்குச் செல்வதற்கான மற்றொரு முயற்சியாக காவல் துறைப் பாதுகாப்பைப் பெற்றனர். [17] [18]

காவல்துறை அலுவலகத்திற்கு வெளியே மிளகாய்/மிளகுத் தூள் தெளிப்பால் அம்மினி தாக்கப்பட்டார், அதன் பிறகு இவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். [19] [20] தேசிய மகளிர் ஆணையம் இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நடவடிக்கை அறிக்கையை அனுப்புமாறு கேரள காவல் துறை தலைவரிடம் கேட்டது. [21] 2019 ஆம் ஆண்டு டிசம்பரில், சபரிமலை வருகைக்கான பாதுகாப்பு உத்தரவுகளை வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. [22] பிப்ரவரி 24, 2021 அன்று கேரள உயர் நீதிமன்றம், அம்மிணி எர்ணாகுளம் நகர ஆணையர் அலுவலகத்திற்கு 2019 ஆம் ஆண்டு சென்றபோது, காவல்துறை பாதுகாப்பு அளிக்கக் கோரியபோது மறுத்த அந்த குழுவுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இரண்டு பேருக்கு முன்சாமீன் வழங்கியது.[18]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

அம்மினி தலித் சமூகத்தைச் சேர்ந்தவர். [1] 18 வயதாக இருந்தபோது, இவர் தனது கணவர் அரிகரனை, மாணவர் அரசியலில் தீவிரமாக இருந்தபோது சந்தித்தார், அவர்கள் திருமணத்திற்கு பிறகு பொயில்காவு கிராமத்தில் குடியேறினர். [1] [2] படுகொலை செய்து கொல்லப்பட்ட ஓல்கா பெனிரியோ பிரெசுடெசு நினைவாக இவர் தன் குழந்தைக்கு ஓல்கா என்று பெயரிட்டார். [2] [3]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Bindu Ammini, husband were with CPI (ML) earlier". Deccan Chronicle. https://www.deccanchronicle.com/nation/current-affairs/030119/bindu-ammini-husband-were-with-cpi-ml-earlier.html. Meethal, Amiya (3 January 2019). "Bindu Ammini, husband were with CPI (ML) earlier". Deccan Chronicle. Retrieved 26 February 2021.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 "They Entered a Forbidden Hindu Temple in the Name of Women’s Rights. Now They’re in Hiding". Time. https://time.com/longform/bindu-kanakadurga-women-hinduism-india/. 
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Her Visit to a Men-Only Temple Went Smoothly. Then the Riots Started.". The New York Times. January 18, 2019. https://www.nytimes.com/2019/01/18/world/asia/temple-india-sabarimala-ammini.html. Schultz, Kai (January 18, 2019). "Her Visit to a Men-Only Temple Went Smoothly. Then the Riots Started". The New York Times. Retrieved 28 March 2021.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 "A lawyer and a govt employee: Meet Bindu and Kanakadurga, who entered Sabarimala" (in en). The News Minute. 2 January 2019. https://www.thenewsminute.com/article/lawyer-and-govt-employee-meet-bindu-and-kanakadurga-who-entered-sabarimala-94382. "A lawyer and a govt employee: Meet Bindu and Kanakadurga, who entered Sabarimala". The News Minute. 2 January 2019. Retrieved 26 February 2021.
  5. Henry, Nikhila (February 12, 2021). "Congress Using Sabarimala to Win Kerala: 1st Woman to Enter Temple". The Quint. https://www.thequint.com/news/india/first-woman-to-enter-sabarimala-slams-congress-draft-bill#read-more. 
  6. 6.0 6.1 Schultz, Kai (February 6, 2019). "Let Women Enter Hindu Temple, Indian Religious Board Says, in Reversal". The New York Times. https://www.nytimes.com/2019/02/06/world/asia/women-temple-hindu-india.html. 
  7. 7.0 7.1 "2 Women Below 50 Enter Sabarimala, Temple Reopens After "Purification"". NDTV.com. https://www.ndtv.com/india-news/two-women-below-50-enter-keralas-sabarimala-temple-police-sources-1971204. 
  8. "Videos show women entering Indian temple after centuries-old ban". The Observers - France 24. https://observers.france24.com/en/20190102-videos-women-sabarimala-hindu-temple-india. 
  9. "Indian women defy Hindu temple ban amid protests". www.aljazeera.com. https://www.aljazeera.com/news/2019/1/2/two-indian-women-enter-sabarimala-temple-in-kerala-amid-protests. 
  10. 10.0 10.1 "Sabarimala: Indian women make history by entering temple". BBC News. January 2, 2019. https://www.bbc.com/news/world-asia-india-46733750. 
  11. 11.0 11.1 "2 Indian Women Enter Sabarimala Temple, Setting Off Protests Near Hindu Shrine". https://www.nytimes.com/2019/01/02/world/asia/india-women-wall-sabarimala.html. பார்த்த நாள்: 28 March 2021. Schultz, Kai; Venkataraman, Ayesha (January 2, 2019). "2 Indian Women Enter Sabarimala Temple, Setting Off Protests Near Hindu Shrine". The New York Times. Retrieved 28 March 2021.
  12. "‘Sabarimala case will become like Ayodhya’: Bindu Ammini who entered temple reacts". The News Minute. https://www.thenewsminute.com/article/sabarimala-case-will-become-ayodhya-bindu-ammini-who-entered-temple-reacts-112291. 
  13. "Indian Woman Who Entered Forbidden Temple Says Her Family Assaulted When She Returned Home". Time. https://time.com/5513055/kanakadurga-sabarimala-hindu-temple-family-abandon/. 
  14. "Tale of Bindu and Kankadurga: 2 women who braved odds and entered Sabarimala temple". https://www.indiatoday.in/fyi/story/who-are-bindu-ammini-and-kankadurga-sabarimala-1422689-2019-01-03. பார்த்த நாள்: 26 February 2021. 
  15. "Sabarimala majority ruling: Review pending, scope widened". November 15, 2019. https://indianexpress.com/article/explained/simply-put-review-pending-scope-widened-in-sabarimala-verdict-6120277/. பார்த்த நாள்: 29 March 2021. 
  16. "Kerala govt’s flip-flop on Sabarimala: Won’t take young women to shrine". November 16, 2019. https://indianexpress.com/article/india/kerala-govts-flip-flop-on-sabarimala-wont-take-young-women-to-shrine-6122147/. பார்த்த நாள்: 29 March 2021. 
  17. 17.0 17.1 "Bindu Ammini, who prayed at Sabarimala last year, attacked with chilli spray before fresh attempt". November 26, 2019. https://indianexpress.com/article/india/sabarimala-protests-live-updates-bindu-ammini-trupti-desai-6137095/. பார்த்த நாள்: 29 March 2021. 
  18. 18.0 18.1 "Kerala High Court Grants Pre-Arrest Bail To 2 Men Accused Of Attacking Sabarimala Activist; Finds Allegations Prima Facie Mala Fide". March 5, 2021. https://livelaw.in/news-updates/kerala-high-court-bail-men-accused-of-attacking-sabarimala-activist-bindu-ammini-170750. பார்த்த நாள்: 28 March 2021. 
  19. "Bindu Ammini, First Woman To Enter Sabarimala In 2018, Attacked With Chilli Powder" (in en). HuffPost. 26 November 2019. https://www.huffpost.com/archive/in/entry/bindu-ammini-sabarimala-trupti-desai_in_5ddc9b28e4b00149f722a14f. 
  20. "Bindu Ammini, who prayed at Sabarimala last year, attacked with chilli spray before fresh attempt". The Indian Express (in ஆங்கிலம்). 26 November 2019. பார்க்கப்பட்ட நாள் 26 February 2021.
  21. "NCW asks Kerala DGP to send report on chilli powder attack on woman activist". Business Standard India. 27 November 2019. https://www.business-standard.com/article/pti-stories/ncw-asks-kerala-dgp-to-send-report-on-chilli-powder-attack-on-woman-activist-119112701350_1.html. 
  22. "'We Know Law Is In Your Favour And There Is No Stay; But We Are Not Passing Any Orders': SC To Women Seeking Protection For Sabarimala Visit". LiveLaw.in. December 12, 2019. https://www.livelaw.in/top-stories/sc-refuses-to-pass-protection-orders-for-women-seeking-sabarimala-temple-entry-150769. 

இதையும் பார்க்கவும்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிந்து_அம்மினி&oldid=3666736" இலிருந்து மீள்விக்கப்பட்டது