பினா பாசுனெட்டு

இந்திய அரசியல்வாதி

பினா பாசுனெட்டு (Bina Basnett) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். சிக்கிம் மாநிலத்தில் வசிக்கும் இவர் அம்ரோ சிக்கிம் கட்சியின் தலைவரும் ஆவார்.

பினா பாசுனெட்டு
Bina Basnett
தொகுதிஅப்பர் தடோங்கு தொகுதி
அம்ரோ சிக்கிம் கட்சி தலைவர்
பதவியில்
24 சனவரி 2019 – 20 செப்டம்பர் 2022
பின்னவர்பாய்ச்சங் பூட்டியா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
பினா பாசுனெட்டு

1984 அல்லது 1985
அரசியல் கட்சிஅம்ரோ சிக்கிம் கட்சி
வாழிடம்(s)ராணிபூல், சிக்கிம்
தொழில்மருத்துவர்
மூலம்: [[1]]

அரசியல் வாழ்க்கை

தொகு

பினா பாசுனெட்டு 2003 ஆம் ஆண்டில் கேங்டாக் தியோராலி பெண்கள் மூத்தோர் மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். சிக்கிம் மணிப்பால் பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் தனது மருத்துவப் படிப்பை முடித்து பட்டம் பெற்றார். 2009 [2] ஆம் ஆண்டில் இளநிலை மருத்துவம் படித்து முடித்த பிறகு, 2013 ஆம் ஆண்டு காங்டாக்கிலுள்ள அதே கல்லூரியில் தனது முதுநிலை மருத்துவப் படிப்பைத் தொடர்ந்தார், பின்னர் புது தில்லியின் லேடி ஆர்டிங்கு மருத்துவக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.

2018 ஆம் ஆண்டு மே மாதம் 31 ஆம் தேதியன்று அன்று பைச்சுங் பூட்டியா தலைமையிலான அம்ரோ சிக்கிம் கட்சியில் பினா பாசுனெட்டு சேர்ந்தார். [3] தொடக்க விழாவில், இவர் அக்கட்சியின் 9 துணைத் தலைவர்களில் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொடக்க விழா முடிந்த சுமார் 8 மாதங்களுக்கு, கட்சியின் தலைவர் பதவி காலியாக இருந்தது. [2] 2019 ஆம் ஆண்டு சனவரி மாதம் 24 ஆம் தேதியன்று துணைத் தலைவராக இருந்த பினா பாசுனெட்டு அம்ரோ சிக்கிம் கட்சியின் முதலாவது தலைவருக்கு பரிந்துரைக்கப்பட்டார். 2019 சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தலில், அவர் அப்பர் தடோங்கு தொகுதியில் இருந்து வேட்பாளராக நின்றார். ஆனால் 1.63 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று தேர்தலில் தோல்வியடைந்தார்.

2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று கட்சித் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களால் பைச்சுங் பூட்டியா அம்ரோ சிக்கிம் கட்சியின் புதிய தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். [4] பினா பாசுனெட்டு தனது பதவிக்காலத்தை நிறைவு செய்தார்.

தேர்தல் பதிவு

தொகு
சிக்கிம் சட்டப்பேரவைத் தேர்தல்
ஆண்டு தொகுதி அரசியல் கட்சி விளைவு நிலைப்பாடு வாக்குகள் % வாக்குகள் % வாக்கு வித்தியாசம் வைப்பு ஆதாரம்
2019 அப்பர் தடோங்கு அம்ரோ சிக்கிம் கட்சி தோல்வி 3வது/5 123 1.63 -49.38 இழப்பு. [5]

மேற்கோள்கள்

தொகு
  1. "myneta.info National Election Watch". Association for Democratic Reforms (ADR). 2019. பார்க்கப்பட்ட நாள் 19 November 2019.
  2. 2.0 2.1 "Dr. Bina Basnett elected as President of HSP Party". The Voice of Sikkim. 24 January 2019. https://voiceofsikkim.com/2019/01/24/dr-bina-basnett-elected-as-president-of-hsp-party/. 
  3. "Hamro Sikkim Party launched at Daramdin". Sikkim Express. 1 June 2018. http://www.sikkimexpress.com/NewsDetails?ContentID=10647. 
  4. "Footballer Bhaichung Bhutia becomes new president of Hamro Sikkim Party". Business Standard. 20 September 2022. https://www.business-standard.com/article/politics/footballer-bhaichung-bhutia-becomes-new-president-of-hamro-sikkim-party-122092000423_1.html. 
  5. "Upper Tadong Election Result 2019 LIVE COUNTING". Firstpost. 27 May 2019. https://www.firstpost.com/sikkim-assembly-elections/upper-tadong-election-results-2019-s21a025. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினா_பாசுனெட்டு&oldid=4162767" இலிருந்து மீள்விக்கப்பட்டது