பிபவாவ் துறைமுகம்

இந்தியத் துறைமுகம்

பிபவாவ் துறைமுகம் (Port Pipavav) இந்தியாவின் முதல் தனியார் துறைமுகமாகும். இந்தியாவின் மேற்கு கடற்கரையிலுள்ள குசராத்து மாநிலத்தின் சௌராட்டிரா தீபகற்பத்திலுள்ள அம்ரேலி மாவட்டத்தின் ராசுலா நகருக்கு அருகில் இத்துறைமுகம் அமைந்துள்ளது. அம்ரேலியிலிருந்து தெற்கில் 90 கிலோமீட்டர் தொலைவு, ராசுலாவிலிருந்து தெற்கில் 15 கிலோமீட்டர் தொலைவு, பவநகரிலிருந்து தென்மேற்கில் 140 கிலோமீட்டர் தொலைவு என இத்துறைமுகத்தின் இருப்பிடத்தை குறிப்பிட்டு அடையாளப்படுத்தலாம். மொத்த மற்றும் நீர்மப் பொருட்களுக்கான சரக்குக் கப்பல்கள் இங்கு கையாளப்படுகின்றன. எ.பி.எம். முனையம் அமைப்பு இத்துறைமுகத்தின் முன்னணி மேம்பாட்டாளராக இருந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய பன்னாட்டு கொள்கலன் முனையங்களை இயக்கும் நிறுவனங்களில் எ.பி.எம் முனைய நிறுவனமும் ஒன்றாகும். வழிகாட்டுதல் / நகர்த்துதல் , சரக்குகளை கையாளுதல் மற்றும் தளவாட ஆதரவு ஆகிய பணிகள் இச்செயல்பாடுகளில் அடங்கும்.

எ.பி.எம்.முனையம்,பிபவாவ் [GPPL]
வகைதனியார் 
நிறுவுகை1996
நிறுவனர்(கள்)நிகில் காந்தி 
தலைமையகம்பிபவாவ், அம்ரேலி மாவட்டம், குசராத்து
முதன்மை நபர்கள்கெல்ட் பீட்டர்சன்  (MD)
ஹரிஹரன் ஐயர்  (CFO)
ரவீந்திரன் பிள்ளரிசெட்டி (தலைமை -துறைமுக கட்டமைப்பு  & வசதி )
தொழில்துறைபோக்குவரத்து,முனையம்  
உரிமையாளர்கள்எ.பி.மோல்லர்-மேர்ச்க் குழுமம்  
இணையத்தளம்http://www.pipavav.com

வரலாறு  தொகு

1998 ஆம் ஆண்டில், குசராத்து கடல்சார் வாரியத்தால் குசராத்து பிபவாவ் துறைமுக கழகம் தொடங்கப்பட்டது . 2000 ஆம் ஆண்டில், இந்த துறைமுகம் இந்திய இரயில்வேயுடன் இணைந்து ஒரு கூட்டு செயல்பாட்டு கழகமாக உருவானது. வணிக செயல்பாடுகள் 2002 இல் தொடங்கின.

2005 இல் எ.பி.எம். முனையம் பெரும்பான்மையான பங்குகளை வாங்கியது. 2009 இல் பிரதான திட்டங்கள் முடிவடைந்து நிறுவனம் இந்தியப் பொதுதுறையுடன் வெளிவந்தது. 2010 ஆம் ஆண்டில் இந்திய பங்கு சந்தையில் இத்துறைமுகம் பட்டியலிடப்பட்டது.

சியல்பெட் தீவு  தொகு

பிபவாவ் துறைமுகத்தில் சியால்பெட் தீவு என்று அழைக்கப்படும் அலைமுறிவை எதிர்கொள்ளும் இயற்கையான படகுத்துறை ஒன்று உள்ளது.

இந்த தீவில் ஒரு சிறிய மீன்பிடி சமூகம் வசித்து வருகிறது. மேலும் இப்படகுத் துறை முதன்மை நிலப்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.

இயல்புகள்  தொகு

பிபவாவ் துறைமுகம் பிரதான வர்த்தக வழிகளிலும் தொடர்பு கொண்டுள்ளது. பிரதானமாக இந்திய நவாவா சேவா இங்கிருந்து சுமார் 160 கடல் மைல் தொலைவில் அமைந்துள்ளது. துறைமுகம் தூர்வாரப்பட்டு கப்பல் அடிநீரின் இடைவெளி 14.5 மீட்டர் இருக்குமளவுக்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மொத்த சரக்குகளை கையாள்வதற்கு இங்கு 2 தானியங்கி துறைமுக தூக்கிகள், 8 கப்பற்துறை மேடை பளு தூக்கிகள் உள்ளன.[1]

குறிப்புகள் தொகு

  1. "Gujarat makes giant strides in seafood exports". Hindu Business Line. 29 April 2010. Archived from the original on 21 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 28 April 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிபவாவ்_துறைமுகம்&oldid=3563378" இலிருந்து மீள்விக்கப்பட்டது