பிபுதேந்திர மிசுரா
பிபுதேந்திர மிசுரா (Bibudhendra Mishra) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1920 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் பிறந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட வீரர், முன்னாள் மத்திய அமைச்சர், வழக்கறிஞர், விளையாட்டு அமைப்பாளர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர் என ஒரு பன்முக ஆளுமையாக அறியப்படுகிறார். ஒடிசாவின் பூரியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் சபையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்தும் இவர் இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவையிலும் ஓர் உறுப்பினராக இருந்தார்.[1][2][3]
பிபுதேந்திர மிசுரா Bibudhendra Mishra | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர், மூன்றாவது மக்களவை | |
பதவியில் 1962–1967 | |
முன்னையவர் | சிந்தாமனி பாணிக்ரகி |
பின்னவர் | ரபி ராய் |
தொகுதி | புரி நாடாளுமன்ற தொகுதி, ஒடிசா |
மாநிலங்களவை உறுப்பினர் | |
பதவியில் 1958–1962 | |
தொகுதி | ஒடிசா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | புரி , ஒடிசா, பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 30 திசம்பர் 1928
இறப்பு | 15 பெப்ரவரி 2012 |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
துணைவர் | உமா மிசுரா |
மூலம்: [1] |
பிபுதேந்திர மிசுரா ஒடிசாவின் பூரி மாவட்டத்தில் உள்ள சசிகோபாலில் குந்தெய்பெண்ட்டு சாகியில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் கோபிநாத் மிசுரா மற்றும் தாயார் பெயர் ராச்யபாலா தேவி என்றும் அறியப்படுகிறது. 1936 ஆம் ஆண்டில் பூரி மாவட்டப் பள்ளியில் மெட்ரிகுலேசன் படிப்பும் பிறகு, 1941 ஆம் ஆண்டில் இரவென்சா கல்லூரியில் பட்டமும் பெற்றார். 1949 ஆம் ஆண்டில் பாட்னா சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
ஒடிசா தடகள சங்கத்தின் தலைவர், சன்சைன் கால்பந்து கழகத்தின் தலைவர், ஒடிசா துடுப்பாட்ட சங்கத்தின் நிறுவனர் உறுப்பினர், கட்டாக் கால்பந்து கழகத்தின் நிறுவனர் உறுப்பினர், உட்டா இசை சங்கத்தின் தலைவர் என பல பொறுப்புகளையும் பிபுதேந்திர மிசுரா வகித்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதியன்று பிபுதேந்திர மிசுரா இறந்தார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Lok Sabha Debates. Lok Sabha Secretariat. January 1963. p. 6621. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ India. Parliament. Rajya Sabha (1962). Parliamentary Debates: Official Report. Rajya Sabha. Council of States Secretariat. pp. 135–. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.
- ↑ "Far from what the patriots envisaged". Telegraph India. 1 April 2011. பார்க்கப்பட்ட நாள் 11 November 2019.