பியசிலி விஜகுணசிங்க

பியசிலி விஜகுணசிங்க (Piyaseeli Wijegunasinghe பிறப்பு: 1943) இலங்கையைச் சேர்ந்த இலக்கிய திறனாய்வாளரும், ட்ரொட்ஸ்கி மற்றும் மார்க்சிய அறிஞரும் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின்  உறுப்பினரும் ஆவார். விஜி குணசிங்கா கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிங்களத் துறையின் தலைவராகவும் 44 வருடங்கள் விரிவுரையாளராகவும்  பணியாற்றியுள்ளார். சோசலிச சமத்துவக் கட்சியில் 1968 முதல் அவரது இறுதிக்காலம் வரை உறுப்பினராக இருந்தார்[1][2][3]

பியசிலி விஜகுணசிங்க.
பிறப்பு(1943-02-22)பெப்ரவரி 22, 1943
இறப்புசெப்டம்பர் 2, 2010(2010-09-02) (அகவை 67)
தேசியம்இலங்கையர்

பியசிலி விஜகுணசிங்க 20 பெப்ரவரி 1943 ஆம் ஆண்டு தென் இலங்கையில் காலி நகரத்துக்கு அருகில் அமைந்துள்ள அப்புகல என்னும் கிராமத்தில் பிறந்தார். தமது ஆரம்பக் கல்வியை மகமொடர கிராம பாடசாலையில் கற்றார். பின் காலியில் அமைந்துள்ள சவுத்லேன்ட் மகளிர் கல்லூரியில் கல்வி கற்றார். பட்டப்படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்தில் மேற்கொண்டார். விஜய குணசிங்கா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் போதே சில அரசியல் போராட்டங்களை நடத்தினார்[4]. 1968 ஆம் ஆண்டு புரட்சிகர கம்யூனிஸ்ட் லீகில் இணைந்து சோசலிசம் மற்றும் சர்வதேசிய வாதியாக மாறினார். புரட்சிகர சோசலிச லீக் பின்னால் சோசலிச சமத்துவக் கட்சி (SEP) என்ற பெயரைப் பெற்றது. பிரித்தானியாவில் புரட்சிகர கட்சியில்  செயற்பட்டு கொண்டு தமது முதுகலை பட்ட படிப்பை தொடர்ந்தார்[4].

மாக்சிய இலக்கிய திறனாய்வு தொடர்பாக புத்தகங்களை எழுதியும் இத்தலைப்பில் பல விரிவுரைகளையும் வழங்கியுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சிங்களத்துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்துள்ளார். அங்கு மார்க்சிய இலக்கிய திறனாய்வு தொடர்பாக கற்பித்தார். குணசிங்க மார்க்சிய நூல்களை சிங்களத்தில் மொழிபெயர்த்துள்ளார்.[5][6]

இவர் சோசலிச சமத்துவ கட்சியின் பொதுச் செயலாளர் விஜேடயஸ் என்பவரை 1967ஆம் ஆண்டு திருமணம் முடித்தார். இவர்களுக்கு கீர்த்தி என்ற மகன் உள்ளார்.[7]

பியசிலி புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு தனது 2 செப்டம்பர் 2010 இல் தமது அறுபத்தேழாம் வயதில் காலமானார்.

நூல்கள் தொகு

பின்வரும் புத்தகங்களை சிங்களத்தில் எழுதியுள்ளார்.

  • இலக்கியத்தில் ஒரு பொருள் முதல்வாத ஆய்வு (1982)
  • நவீன சிங்கள இலக்கியத் திறனாய்வில் மார்க்சிஸ்ட் ஆய்வு (1987)
  • கலை திறனாய்வில் மார்க்சிய கொள்கைகள்: சுசரிதா கம்லதாவிற்கு பதில் (1995)
  • சிறிய விசயங்களின் கடவுள் ( விமர்சனம் மற்றும் பதில்)

மொழிபெயர்ப்பு தொகு

பின்வரும் ஆங்கில புத்தகங்களை சிங்களத்தில் மொழிபெயர்த்தார்.

  • நான்காம் அகில வரலாற்றில் கெரி ஹெலியும் அவருடைய இடமும் (1993)
  • நாம் பாதுகாக்கும் பாரம்பரியம்(1990)
  • போல்ஷி மற்றும் அவந்த்-கார்டே கலைஞர்கள் (1993)
  • சோசலிசத்தின் அழகியல் கூறுகள் எழுதியவர் டேவிட் வால்ஸ் (1998)
  • மார்க்சியத்தின் பாதுகாப்பு எழுதியவர் லியோன் ட்ரொட்ஸ்கி

குறிப்புகள் தொகு

  1. http://www.wsws.org/articles/2010/sep2010/piya-s06.shtml
  2. Piyaseeli Wijegunasinghe#cite ref-2
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-07-25. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  4. 4.0 4.1 "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-07. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-07. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
  6. https://books.google.com/books?id=MLqmdDp3l0oC&pg=PA274#v=onepage&q&f=false
  7. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2018-01-07. பார்க்கப்பட்ட நாள் 2019-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியசிலி_விஜகுணசிங்க&oldid=3563390" இலிருந்து மீள்விக்கப்பட்டது