பியரி மொழி
பியரி மொழி (பியரி பாஷை), கருநாடகத்தில் தக்சின கன்னட மாவட்டத்திலும், கேரளத்தின் காசரகோடு மாவட்டத்திலும் வாழும் இசுலாமியர்களால் பேசப்படும் மொழி. இம்மொழி மலையாள சொற்றொடர் அமைப்பிலும், துளு ஒலிப்பியலுக்கு ஏற்றபடியும் அமைந்துள்ளதால், இவ்விரு மொழிகளுக்கும் நெருக்கமானது. நெருங்கிய மொழி என்பதால் மலையாளம், தமிழ் பேசுபவர்கள் இம்மொழியை 75 விழுக்காடு புரிந்துகொள்வர்.
பியரி | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | கர்நாடகம், கேரளம் |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | – |
அமைப்பு
தொகுஇம்மொழி கன்னட எழுத்துகளைப் பயன்படுத்துகிறது. பியரி மொழியில் ழ், ண், ற் ஆகியவை காணப்படுவதில்லை [1] 'ḷ' மலையாளத்தில் உள்ள ள், ண் ஆகியவை ல், ந்(ன்) ஆகியவையாக முறையே மாறுகின்றன.[1] இதே போல ற் என்பது ர் என்பதோடும் ஒன்றி விடுகின்றது[2] இது துளு மொழியை ஒப்பதாக உள்ளது[2] எடுத்துக்காட்டுச் சொற்கள்
பியரி மொழி | கன்னடம் | மலையாளம் | தமிழில் பொருள் |
---|---|---|---|
சந்தே | சந்தே | சந்தா | சந்தை |
ஏனி | ஏனி | ஏணி | ஏணி |
புலி | ஹுளி | புளி | புளி |
காத் | காலி | காத்து | காற்று |
மலையாளத்தில் (தமிழிலும்) ‘வ’ என்னும் எழுத்தில் தொடங்கும் சொற்கள், பியரி மொழியில் ‘ப’ எனத் தொடங்குகின்றன. துளுவும் இதே அமைப்பைக் கொண்டிருக்கிறது.
பியரி மொழி | மலையாளம் | துளு | கன்னடம் | தமிழில் பொருள் |
---|---|---|---|---|
பேலி | வேலி | பேலி | பேலி | வேலி |
பிட்டு | வித்து | பிட்டே | பீஜ | வித்து (விதை) |
பாடெகெ | வாடக | பாடை | பாடகெ | வாடகை |
மலையாளத்தில் இறுதியில் ’ஆ’ என்று முடியும் சொற்கள் பியரி மொழியில் ‘ஏ’ என்று முடியும்.
பியரி | கன்னடம் | மலையாளம் | தமிழ் |
---|---|---|---|
ஆமே | ஆமே | ஆமா | ஆமை |
சேரே | கேரே | சேரா | சாரைப் பாம்பு |
மூலே | மூலே | மூலா | மூலை |
மலையாளச் சொல்லின் முடிவில் வரும் ‘ன்’, ‘ம்’ ஆகியன பியரியில் இல்லை.
பியரி | மலையாளம் | தமிழ் |
---|---|---|
இல்லே | இல்லம் | இல்லம் |
கள்ளா | கள்ளன் | கள்ளன் |
சொற்தொடர்புகள்: பெரும்பாலான சொற்கள் மலையாளம், துளு ஆகியவற்றை ஒத்திருக்கும். இம்மொழி அரபு சொற்களையும் உள்வாங்கியிருக்கிறது.
மொழிவளம்
தொகுபியரி மொழியில் இலக்கியங்கள் எழுதப்பட்டுள்ளன. ஆங்கிலம்- கன்னடம்- பியரி அகராதி ஒன்றும் உள்ளது. ஏறத்தாழ 100 நூல்களும், 400 ஒலிக்கோப்புகளும், 2 காணொளிகளும் இம்மொழியில் வெளிவந்துள்ளன. இம்மொழியில் பியாரி என்னும் திரைப்படம் வெளியாகியுள்ளது. திருமண, திருவிழா நிகழ்ச்சிகளில் பாடப்படும் நாட்டார் பாடல்கள் புழக்கத்தில் இருந்து மறைந்து வருகின்றன.
மொழிக் குழு
தொகுஇதுவரை நான்கு பியரி இலக்கியக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. பியரி கலை அகாதெமி அமைத்தல், பியரி மொழிக்கு நேரும் அவலங்கள் ஆகியவற்றைப் போக்க இக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றும்.
அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்
தொகு- ↑ 1.0 1.1 Upadhyaya 1996, p.65
- ↑ 2.0 2.1 Upadhyaya 1996, p.66