பியர் பாவ்லோ பசோலினி

பியர் பாவ்லோ பசோலினி (Pier Paolo Pasolini) (பிறப்பு:5 மார்ச் 1922 – 2 நவம்பர்1975), இத்தாலி நாட்டு கவிஞரும், திரைப்பட இயக்குநரும், நாவலாசிரியரும், திரைக்கதை எழுத்தாளரும், நாடக ஆசிரியரும், நடிகரும், சமூக சிந்தனையாளரும் ஆவார். இவர் இருபதாம் நூற்றாண்டில், இத்தாலியின் கலைஞர்கள் மற்றும் அரசியல் அறிஞர்களில் தலைசிறந்தவர்களில் ஒருவருவராக அறியப்பட்டார். மேலும் இவர் வழக்கத்திற்கு மாறான திரைப்படங்களுக்காக குறிப்பிடத்தக்கவர்.[1][2][3][4] இவர் பாசிச கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுவுடமைக் கொள்கைக்கு ஆதரவு வழங்கியவர்.

பியர் பாவ்லோ பசோலினி
1964ல் பியர் பாவ்லோ பசோலினி
1964ல் பியர் பாவ்லோ பசோலினி
பிறப்பு(1922-03-05)5 மார்ச்சு 1922
போலோக்னா, இத்தாலி
இறப்பு2 நவம்பர் 1975(1975-11-02) (அகவை 53)
ஒஸ்தியா, இத்தாலி
தொழில்சமூக சிந்தனையாளர், புதின எழுத்தாளர், திரைப்பட இயக்குநர், கவிஞர், ஊடகவியலாளர்
கல்வி நிலையம்போலோக்னா பல்கலைக்கழகம்
கையொப்பம்

இத்தாலிய இராணுவ அதிகாரியின் மகனான பியர் பாவ்லோ பசோலினி, வடக்கு இத்தாலியின் பல்வேறு நகரங்களின் பள்ளிகளில் கல்வி கற்றார், அங்கு அவரது தந்தை அடுத்தடுத்து பணி மாற்றம் செய்யப்பட்டார். அவர் போலோக்னா பல்கலைக்கழகத்தில் கலை வரலாறு மற்றும் இலக்கியம் படித்தார். இரண்டாம் உலகப் போரின் போது ஃப்ரியூலி பகுதியின் ஒடுக்கப்பட்ட விவசாயிகளிடையே பசோலினி தஞ்சம் அடைந்தது, பின்னர் அவர் ஒரு பொதுவுடமைவாதியாக மாற வழிவகுத்தது. 1950களில் உரோமில் அவர் வறுமையில் வாடினார் என்பது அவரது முதல் இரண்டு நாவல்களான ரகஸ்சி டி விட்டா (1955; தி ராகாசி) மற்றும் உனா விட்டா வயலென்டா (1959; ஒரு வன்முறை வாழ்க்கை) ஆகியவற்றிற்கான பொருட்களை வழங்கியது. ரோமில் உள்ள சேரி வாழ்க்கையின் வறுமை மற்றும் இழிநிலையின் இந்த கொடூரமான யதார்த்தமான சித்தரிப்புகள் அவரது முதல் திரைப்படமான அக்காட்டோன் (1961)ல் காட்சிப்படுத்தப்பட்டது. இவரது மூன்று படைப்புகளான திருடர்கள், விபச்சாரிகள் மற்றும் ரோமானிய பாதாள உலகத்தின் பிற நபர்களின் வாழ்க்கையைக் விளக்குகிறது.

பியர் பாவ்லோ பசோலினியின் சிறந்த திரைப்படமான, இல் வான்ஜெலோ செகண்டோ மேட்டியோ (1964; செயிண்ட் மத்தேயுவின் நற்செய்தியின்படி), இது இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை மற்றும் தியாகங்களை மறுபரிசீலனை செய்கிறது.. இவரது ஓடிபஸ் ரெக்ஸ் (1967) மற்றும் மீடியா (1969). தியோரேமா (1968; “தேற்றம்”) மற்றும் போர்சில் (1969; “பிக்ஸ்டி”) போன்ற திரைப்படங்களில் அவரது அரசியல் மற்றும் மத ஊகங்களுக்கு சிற்றின்பம், வன்முறை மற்றும் சீரழிவு போன்றவற்றை பசோலினி பயன்படுத்தியதால், ரோமன் கத்தோலிக்க திருச்சபையுடன் மோதலுக்கு கொண்டு வந்தது. . பசோலினி ஏராளமான கவிதைத் தொகுதிகளையும் இலக்கிய விமர்சனத்தின் பல படைப்புகளையும் வெளியிட்டார்.

நவம்பர் 1975 இல் ஓஸ்டியா நகரத்தில் பியர் பாவ்லோ பசோலினி கொலை செய்யப்பட்டமை குறித்து இத்தாலியில் பெரும் எதிர்ப்பு அலைகளும், விவாதங்களும் ஏற்பட்டது. தீவிர வலதுசாரி பயங்கரவாதத்துடன் நெருங்கிய தொடர்புடைய கொலையாளியே, பியர் பாவ்லோ பசோலினியை கொலை செய்ததாக காவல்துறை கருதியது.[5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Il Dissenso di un Intellettuale: Pier Paolo Pasolini, a Cen". news-art.it (in இத்தாலியன்). பார்க்கப்பட்ட நாள் 17 August 2022.
  2. Quarti, Matilde (18 November 2017). "La vita e i libri di Pier Paolo Pasolini, intellettuale corsaro". ilLibraio.it (in இத்தாலியன்). பார்க்கப்பட்ட நாள் 17 August 2022.
  3. "Pier Paolo Pasolini, l'uomo, l'artista, l'intellettuale: un volume in digitale dell'Espresso". la Repubblica (in இத்தாலியன்). 15 November 2021. பார்க்கப்பட்ட நாள் 17 August 2022.
  4. "Pasolini 100 anni intellettuale sempre più profetico - Libri - Approfondimenti". Agenzia ANSA (in இத்தாலியன்). 27 February 2022. பார்க்கப்பட்ட நாள் 17 August 2022.
  5. "Plea to reopen Pasolini murder file presented". ANSA. March 3, 2023.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியர்_பாவ்லோ_பசோலினி&oldid=4169381" இலிருந்து மீள்விக்கப்பட்டது