பியூடைபை
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
பெவீக்ஸ் அர்விட் உல்ஃப் கஜெல்பெர்க், (Felix Arvid Ulf Kjellberg, பிறப்பு: அக்டோபர் 24, 1989) இணையத்தில் பியூடைபை (PewDiePie) என அறியப்படுகிறார். இவர் சுவீடிய வலைத்தள நகைச்சுவையாளர் மற்றும் வீடியோ தயாரிப்பாளர் ஆவார். "லெட்டஸ் ப்ளே" வர்ணனைகள் மற்றும் வீடியோ வலைப்பதிவுகளுக்கு அவர் அறியப்பட்டவர். இவர் கூகுள் நிறுவனத்தின் பிரபல வலைதளமான யூ-டியூபிலும் தனது அதிகமான சந்தாதாரர்களுக்கு பெயர் போனவர்.
பிறப்பு மற்றும் வாழ்க்கை
தொகுஸ்வீடனின் கோட்டன்பேர்க்கில் பிறந்தவர், சால்மேர்ஸ் பல்கலைக்கழகத்தில் தொழில்துறை பொருளியல் மற்றும் தொழில்நுட்ப மேலாண்மைகளில் பட்டம் பெற படித்து வந்தார். 2010 இல், பல்கலைக்கழக படிப்பின் போது, அவர் பியூடைபை என்ற பெயரில் ஒரு யூடியூப் கணக்கை பதிவு செய்தார். அடுத்த ஆண்டு அவரது பட்டப்படிப்பில் ஆர்வம் இல்லாமல் இருந்ததால் சால்மர்ஸ் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறி, அவரது பெற்றோருக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருந்தார். ஸ்காண்டிநேவியாவில் ஒரு விளம்பர நிறுவனத்துடன் ஒரு தொழிற்பயிற்சி பெறுவதில் தோல்வியுற்ற பிறகு, அவர் தனது யூடியூப் சேனலுக்கான உள்ளடக்கத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்த முடிவு செய்தார். அவர் யூடியூபில் வீடியோக்களைச் செய்வதற்கு நிதி பெற, தனது போட்டோ ஷாப் கலைத் திட்டங்களை அச்சிட்டு விற்பனை செய்தும் மற்றும் ஹாட் டாக் ஸ்டாண்டில் பணிபுரிந்தும் நிதி திரட்டினார்.
யூடியூபில் சாதனைகள்
தொகுபியூடைபையின் சேனலுக்கு ஆதரவு பெருக, விரைவாக இணைய சந்தாதாரர்கள் கூடினார்கள். ஜூலை 2012 இல், அவரது சேனல் ஒரு மில்லியன் சந்தாதாரர்களை விஞ்சியது. ஆரம்பத்தில், பல-சேனல் வலையமைப்பான மாச்சினிமாவுக்கு பியூடைபை ஒப்பந்தம் செய்தார். மச்சினிமா நெட்வொர்க்குடன் அதிருப்தி அடைந்த பிறகு, மேக்கர் ஸ்டுடியோவுடன் கையெழுத்திட்டார், மேக்கர்ஸின் சப் நெட்வொர்க்குகளான போலார்ஸ் மற்றும் அதன் பின்னர், ரெவ்மொட் ஆகியோரின் கீழ் அவரது சேனலை வைத்திருந்தார். யூடியூப் இல் தனது பதிப்புகளுக்காக, பியூடைபை பெரிதும் பாராட்டப்பட்டார். சில சந்தர்ப்பங்களில் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. பியூடைபின் பல வீடியோக்களில் யூத-எதிர்ப்புவாதத்தின் மீதான குற்றச்சாட்டுகள், 2017 இன் முற்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தின. டிஸ்னி இயக்கும் மேக்கர் ஸ்டுடியோஸ் அவருடன் தங்கள் கூட்டணியை முறித்துக்கொண்டது.
15 ஆகஸ்ட் 2013 இல் அதிகமான சந்தாதாரர்களைக் கொண்டவராக உருவெடுத்தார். 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 22 ஆம் தேதி முதல், 2018 ஜனவரி மாதம் வரை இவரது யூடியூப் கணக்கு 60 மில்லியன் சந்தாதாரர்களைக் கடந்துள்ளது. இவரது வீடியோக்களே யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்டவையாக திகழ்கிறது. ஜனவரி 2018 வரை இவரது சேனல் 17 பில்லியன் வீடியோ காட்சிகளைப் (views) பெற்றுள்ளது.[1] 2016 இல், டைம் இவரை "உலகின் 100 மிக செல்வாக்குள்ள மக்கள்" என பெயரிட்டது.[2]
வீடியோ விளையாட்டுகளில் செல்வாக்கு
தொகுபியூடைபின் வர்ணனைகள் இண்டி - விளையாட்டுகள் விற்பனைக்கு மிக சாதகமான விளைவைக் கொண்டிருந்தன. உதாரணமாக மெக் - பிக்செல் இன் உரிமையாளர்கள் கூறியதாவது, "அந்த நேரத்தில் மெக் - பிக்செல் க்கு மிகப்பெரிய சக்தியானது 'லெட்'ஸ் ப்ளே' வீடியோக்கள், பெரும்பாலும் ஜெஸ்ஸி காக்ஸ் மற்றும் பியூடைபை உடைய வீடியோக்கள் ஆகியவையாகும். பியூடைபை ஸ்லெண்டரின் பதிப்புகளான எட்டு பக்கங்கள் மற்றும் ஆடு சிமுலேட்டர் ஆகியவையின் விற்பனையையும் உறுதிப்படுத்தினார். பியூடைபை இன் சேனலில் இடம்பெற்றுள்ள விளையாட்டுக்கள் வணிக ரீதியான வெற்றிக்கு பங்களிப்பு செய்ததாகக் கூறப்பட்டாலும், "நான் விளையாடுவதை விரும்பவில்லை, விற்பனை செய்வதை நான் விரும்பவில்லை" என்றார்.
அறக்கட்டளைகள்
தொகுபியூடைபையின் புகழ் அவரை நிதி திரட்டும் இயக்கங்களுக்கான ஆதரவைத் தூண்ட அனுமதித்தது. 2012 பிப்ரவரி "இணையதளத்தின் இராஜா" எனும் போட்டியில் பியூடைபை பங்கேற்றார். "இணையதளத்தின் இராஜா" எனும் பட்டத்தை அவர் இழந்தார். எனினும் "இணையதள விளையாட்டுகளின் இராஜா" எனும் பட்டத்தை 1-15 பிப்ரவரியில் நடந்த வாக்கெடுப்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பியூடைபை தனக்கு வெற்றி பரிசாக கிடைத்த பணத்தை உலக வனவிலங்கு நிதியகத்திடம் நன்கொடை அளித்தார்.[3] அவர் செயின்ட் ஜூட் குழந்தைகள் ஆராய்ச்சி மருத்துவமனைக்காக பணம் திரட்டினார்.[4]
பியூடைபை "வாட்டர் கேம்பெயின்" ("Water Campaign") எனும் தொண்டு நிறுவனத்தைத் துவங்கினார். அதில் அவரது ரசிகர்கள் நன்கொடைகள் அளிக்கலாம். பியூடைபை பத்து மில்லியன் சந்தாதாரர்களை அடைந்த கொண்டாட்டத்தின் போது இந்நிறுவனத்தை துவங்கினார். பியூடைபையும் ஒவ்வொரு 500 காட்சிகளுக்கும் ஒரு டாலரை அத்தொண்டு நிறுவனத்துக்கு அளித்தார். பியூடைபை கொடையை 250,000 அமெரிக்க டாலராக உயர்த்துவதற்கான இலக்கைக் கொண்டிருந்தார். ஆனால் இந்த இயக்கத்தின் இறுதியில், மொத்தமாக எழுப்பப்பட்ட தொகை $ 446,462 ஆகும்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ https://www.youtube.com/user/PewDiePie/about
- ↑ http://time.com/4302406/felix-kjellberg-pewdiepie-2016-time-100/
- ↑ https://www.theguardian.com/technology/2014/mar/25/pewdiepie-youtube-crowdfunding-save-the-children-indiegogo
- ↑ http://www.prweb.com/releases/pewdiepieblog/2millionsubscribers/prweb9909309.htm
- ↑ https://my.charitywater.org/felix-kjellberg/pewdiepie
வெளியிணைப்புகள்
தொகு- யூடியூபில் பியூடைபை காணொளி
- ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் பியூடைபை
- Sveriges Radio – Felix "PewDiePie" Kjellberg