பியூரிபிகேசன் சாந்தமார்த்தா

பியூரிபிகேசன் சாந்தமார்த்தா (Purificacion Santamarta) எசுப்பானியாவைச் சேர்ந்த இவர் ஓர் இணை ஒலிம்பிக் தடகள வீரராவார்.முக்கியமாக டி 11 வகைப்பாடு விரைவோட்ட நிகழ்வுகளில் போட்டியிடுகிறார்.

பதக்க சாதனைகள்
இணை ஒலிம்பிக் தடகளப்போட்டிகள்
நாடு  எசுப்பானியா
இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1984 நியூ யார்க் 100 மீட்டர் பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1984 நியூ யார்க் 400 மீட்டர் பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1988 சியோல் 100 மீட்டர் பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1992 பார்செலோனா 100 மீட்டர் பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1992 பார்செலோனா 200 மீட்டர் பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1992 பார்செலோனா 400 மீட்டர் பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1992 பார்செலோனா 800 மீட்டர் பி1
தங்கப் பதக்கம் – முதலிடம் 1996 அட்லான்டா 100 மீட்டர் டி10
தங்கப் பதக்கம் – முதலிடம் 1996 அட்லான்டா 200 மீட்டர் டி10
தங்கப் பதக்கம் – முதலிடம் 1996 அட்லான்டா 400 மீட்டர் டி10
தங்கப் பதக்கம் – முதலிடம் 2000 சிட்னி 400 மீட்டர் டி11
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1980 ஆம்கெம் 4000 மீட்டர் ஏ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1988 சியோல் 400 மீட்டர் பி1
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1988 சியோல் நீளம் தாண்டுதல் பி1
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2000 சிட்னி 100 மீட்டர் டி12
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2004 ஏதென்ஸ் 200 மீட்டர் டி11

சுயசரிதை தொகு

இவர் ஏழு இணை ஒலிம்பிக்கில் போட்டியிட்டு, மொத்தம் 16 பதக்கங்களை வென்றுள்ளார். அதில் பதினொரு தங்கம் அடங்கும். இவரது முதல் ஆட்டங்கள் 1980 ஆம் ஆண்டில் இருந்தன. அதில் இவர் 60 மீட்டரில் ஓடினார். மேலும், 400 மீட்டரில் வெள்ளியை வென்றார். 1984 ஆம் ஆண்டில் இவர் நீளம் தாண்டுதலில் போட்டியிட்டு 100 மீட்டரிலும், 400 மீட்டர் இரண்டிலும் தங்கப்பதக்கம் வென்றார். இவரது மூன்றாவது ஆட்டங்கள் 1988 ஆம் ஆண்டில் சியோலில் இருந்தன. அதில் இவர் தனது 100 மீட்டர் பட்டத்தை தக்கவைத்து 400 மீட்டர் ஓட்டத்திலும், நீளம் தாண்டுதலிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்றார்.

இணை ஒலிம்பிக் போட்டிகள் தொகு

1992 கோடைகால இணை ஒலிம்பிக் போட்டிகளில் தனது சொந்த மண்ணில் விளையாடினார். இதில் தொடர்ந்து மூன்றாவது 100 மீட்டர் பட்டத்தை வென்றார். மேலும், 200 மீ, 400 மீ, 800 மீ ஆகியவற்றில் தங்கங்களைச் சேர்த்தார். 1996 ஆம் ஆண்டில் இவர் தனது 100 மீ, 200 மீ மற்றும் 400 மீட்டர் பட்டங்களை பாதுகாப்பதில் வெற்றி பெற்றார். ஆனால் 800 மீட்டரில் ஓடவில்லை.சிட்னியில் நடந்த 2000 கோடை இணை ஒலிம்பிக்கில் 100 மீட்டரில் முதல் தடவையாக ஐந்து ஆட்டங்களில் தோல்வியடைந்தார். பிரேசிலின் ஆட்ரியா சாண்டோஸ் இவரை இரண்டாவது இடத்திற்கு வீழ்த்தினார். ஆனால் இவர் மூன்று 400 மீட்டரில் தொடர்ந்து தங்கம் வென்றார். ஏதென்சில் நடந்த 2004 கோடைகால இணை ஒலிம்பிக்கில் இவர் 200 மீட்டரில் வெண்கலத்தை வென்றார். ஆனால் 100மீட்டரிலும், 400 மீட்டரிலும் வெற்றியை ஈட்டவில்லை. [1]

குறிப்புகள் தொகு