பியேத்ரிசு பார்புய்

பியேத்ரிசு இலியோனார் சில்வேரா பார்புய் (Beatriz Leonor Silveira Barbuy)ஒரு பிரேசி வானியற்பியலாளர் ஆவார். இவர் 2009 இல் பிரேசில் சார்ந்த எப்போக்கா இதழால் தலைசிறந்த 100 பிரேசிலியர்களில் ஒருவராகத் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டுள்ளார்.[2] இவர் சாவோ பவுலோ பல்கலைக்கழகத்தின் வானியல் நிறுவனத்தில் புவி இயற்பியல், வளிமண்டலவியல் பேராசிரியராக உள்ளார். இவர் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் துணைத்தலைவரும் 2009 ஆம் ஆண்டில் யுனசுகோவின் பெண் அறிவியலாளருக்கான உலோரியல் விருதுபெற்ற ஐவரில் ஒருவரும் ஆவார்.

பியேத்திரிசு பார்புய்
Beatriz Barbuy
பிறப்புபெப்ரவரி 16, 1950 (1950-02-16) (அகவை 74)[1]
சாவோ பவுலோ, பிரேசில்
வாழிடம்[சாவோ பவுலோ
தேசியம்பிரா இனத்தவர்
துறைவானியற்பியல், வானியல், கல்வி
பணியிடங்கள்சாவோ பவுலோ பல்கலைக்கழகம்
விருதுகள்பெண் அறிவியலாளருக்கான யுனசுகோ உலோரியல் விருது
அறிவியல் தகைமைக்கான பிரேசில் தேசிய ஆணை

வாழ்க்கைப் பணி தொகு

இவர் பிரேசில் படைத்துறை ஆட்சியில் தன் ஆய்வுரையை எழுத முயன்றபோது பிரேசிலில் இயலாஅற் போனது. ஏனெனில் இவரது வகுப்புத்தோழர்களும் புல வல்லுனர்களும் சிறைபிடிக்கப்பட்டனர் அல்லது தலைமறைவாகினர்.[3]

இவர்1978 இல் பிரான்சு சென்று தன் ஆராய்ச்சியை உரோசர் காய்ரெலின் குழுவில் பாரிசு வான்காணகத்தில் தொடர்ந்தார். இவர் தன் ஆராய்ச்சியை, விண்மீன்களில் உள்ள முதன்மைத் தனிமங்களான கரிமம், காலகம் உயிரகம் ஆகியவற்றில் சுழி முதல் 12 பில்லியன் ஆண்டு அகவை பால்வெளிகளில் நிகழ்த்தினார். இவர் தன் ஆய்வு வழியாக இந்தத் தனிமங்களின் அளவுகள் புடவிப் படிமலர்ச்சியின்போது பால்வெளிகளின் தோற்றக் காலத்தில் இருந்த அண்மைக் காலம் வரை எப்படி அமைந்தன என்பதை மீள்கட்டுமானம் செய்தார்.

இவர் 2001 இல் இருந்து 2005 வரை ஐரோப்பிய தெற்கு வான்காணகம் நடத்திய பன்னாட்டு முதல் தலைமுறை விண்மீன்கள் உருவாக்கத் திட்டத்தில் முதன்மையான பாத்திரம் வகித்து கணிசமான பங்களிப்புகளைச் செய்தார். இந்த நிகழ்ச்சி 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய விண்மீன்களின் வேதி உட்கூறுகளைப் பற்றிய விரிவான தரவுகளைத் திரட்டியது.[3] இவர் பன்னாட்டு வானியல் கழகத்தின் துணைத்தலைவராகவும் அதன் விண்மீன் பிரிவின் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டார்.[4]

இவருக்கு 2005 இல் பிரேசில் தேசிய அறிவியல் தகைமை ஆணை பிரேசிலிய அறிவியல் கல்விக்கழகத்தால் வழங்கப்பட்டது.[5]

அறிவியலில் மகளிருக்கான யுனெசுகோ உலோரியல் விருதை 2009 இல் வென்ற ஐவரில் இவரும் ஒருவர் ஆவார். இந்த விருது இவரது இயற்பியல் பணிக்காக பாரீசில் உள்ள யுனெசுகோ தலைமையக விழாவில் மார்ச்சு 5 இல் வழங்கப்பட்டது.[2][6] இவர் பின்னர் பிரேசிலுக்குத் திரும்பிவந்து, சாவோ பவுல்லோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பதவியை ஏற்றார்.[3]

தேர்ந்தெடுத்த வெளியீடுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Dante Grecco (27 January 2004). "Perfil: Gente do céu". Folha de S.Paulo (in Portuguese). பார்க்கப்பட்ட நாள் 2013-10-18.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. 2.0 2.1 Roger Cayrel (5 December 2009). "Beatriz Barbuy" (in Portuguese). Época இம் மூலத்தில் இருந்து 17 டிசம்பர் 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20141217200518/http://revistaepoca.globo.com/Revista/Epoca/1,,EMI108890-15228,00.html. 
  3. 3.0 3.1 3.2 "Beatriz Barbuy: In the wake of the first stars". Fundação de Amparo à Pesquisa do Estado de São Paulo. April 2013. Archived from the original on 2013-11-08. பார்க்கப்பட்ட நாள் 2018-08-19.
  4. "Beatriz Barbuy". International Astronomical Union.
  5. "Beatriz Leonor Silveira Barbuy". Brazilian Academy of Sciences.
  6. "IAU Vice-President receives L'ORÉAL–UNESCO award". International Astronomical Union. 5 March 2009.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியேத்ரிசு_பார்புய்&oldid=3621084" இலிருந்து மீள்விக்கப்பட்டது