பியேர் என்றி பியூசெயூக்சு

பியேர் என்றி பியூசெயூக்சு (Pierre Henri Puiseux) (பிரெஞ்சு மொழி: [pɥizø]; ஜூலை 20, 1855 - செப்டம்பர் 28, 1928) ஒரு பிரெஞ்சு வானியலாளர் ஆவார்.

பியேர் பியூசெயூக்சு.

இவர் பாரீசில் விக்தர் பியூசெயூக்சுக்குப் பிறந்தார். இவர் எக்கொல் நார்மேல் சுபேரியூரில் கல்விகற்றார். பின்னர், பாரீசு வான்காணகத்தில் 1885 இல் பணிபுரியத் தொடங்கினார்.

இவர் மவுரிசு உலோயெவியுடன் இணைந்து ஒளிப்பிறழ்வு, குறுங்கோள்கள், நிலாவின் இயக்கம் பற்றித் தோல்விகண்ட கார்த்தே து சீ திட்டத்தில் பணிபுரிந்தார். இவரும் உலோயெவியும் நிலாவின் 6000 ஒளிப்படங்களை பிடித்து நிலாவின் பட அட்டவணையை உருவாக்கினர். பிரெஞ்சு அறிவியல் கல்விக்கழகம் இவருக்கு 1892 இல் வைசு பரிசும்[1] 1896 இல் இலாலண்டே பரிசும் வழங்கியது. இவர் 1912 இல் அக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.

இவர் 1900 இல் இவர் பிரெஞ்சு வானியல் கழகத்தின் உயர் விருதான பிரிக்சு யூல்சு ஜான்சென் விருதைப் பெற்றார். இவர் அக்கழகத்தின் தலைவராக 1911 முதல் 1913 வரை பதவி வகித்தார்.[2]

நிலாவின் பியூசெயூக்சு குழிப்பள்ளம் இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.[3]

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு

நினைவேந்தல்கள்தொகு