பிரசன்ன குமார் தாகூர்
பிரசன்ன குமார் தாகூர் (Prasanna Kumar Tagore) (1801–1886) இவர் இந்துக் கல்லூரியின் நிறுவனர்களில் ஒருவரான கோபி மோகன் தாகூரின் மகனாவார். தாகூர் குடும்பத்தின் பாதுரியகட்டா கிளையைச் சேர்ந்த இவர், இந்து சமுதாயத்தின் பழமைவாத கிளையின் தலைவர்களில் ஒருவராக இருந்தார். [1]
பிரசன்ன குமார் தாகூர் | |
---|---|
பிறப்பு | கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 21 திசம்பர் 1801
இறப்பு | 30 ஆகத்து 1886 கொல்கத்தா, வங்காளம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | (அகவை 84)
தேசியம் | இந்தியன் |
பணி | வழக்கறிஞர் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகு1817ஆம் ஆண்டில் செர்போர்ன் பள்ளி மற்றும் இந்து கல்லூரியில் கல்வி பயின்றார். பாரம்பரிய இசுமிருதி மற்றும் மேற்கத்திய சட்டம் குறித்த தனது அறிவால், இவர் குடிமை நீதிமன்றத்தில் சட்டப் பயிற்சி மேற்க்கொள்ளத் தொடங்கினார். ஒரு குறுகிய காலத்திற்குள் இவர் அரசாங்க வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். ஆனால் 1850ஆம் ஆண்டில் குடும்பச் சொத்தை கவனிப்பதற்காக அந்த வேலையை விட்டுவிட்டார். 1854இல் ஆளுநரின் குழு உருவாக்கப்பட்டபோது, இவர் எழுத்தராகச் சேர்ந்தார். அந்த நேரத்தில் இவர் பணக்கார வங்காளர்களில் ஒருவராக மதிக்கப்பட்டார். [2]
சாதனைகள்
தொகுஇவர் கௌடிய சமாஜத்தின் (1823) நிறுவனர்-செயலாளராக இருந்தபோதிலும், இவர் உடன்கட்டை ஏறல் முறையை ஒழிப்பதற்கான இராசாராம் மோகன் ராயின் பிரச்சாரத்தில் பங்கேற்றார். [3] இவர் பிரம்ம சமாஜத்தின் அசல் அறங்காவலர்களில் ஒருவராக இருந்தார் (1830 பிரம்ம சபையின் அறக்கட்டளை பத்திரத்த்தின்படி). [4] பிரசன்னா குமாரால் துர்கா பூஜை கொண்டாடப்படுவதை டெரோசியோ கடுமையாக விமர்சித்தார். மேலும் தன்னை தத்துவவாதியான இராம்மோகனைப் பின்பற்றுபவர் என்று அழைத்துக் கொண்டார். [5]
பணிகள்
தொகுஇவர் அந்தக் காலத்தின் பல அமைப்புகளுடன் தீவிரமாக தொடர்பு கொண்டிருந்தார். துவாரகநாத் தாகூருடன் சேர்ந்து நில உரிமையாளர்களின் சங்கம் மற்றும் பிரிட்டிசு இந்திய சங்கம் அமைப்பதில் தீவிரமாக ஈடுபட்டார். 1867 ஆம் ஆண்டில் இவர் அதன் தலைவரானார். [6]
கல்வியின் பரவலில் அவர் முக்கிய பங்கு வகித்தார். கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற தாகூர் சட்ட பேராசிரியர் பதவி அவரது நன்கொடையிலிருந்து பெறப்பட்ட வட்டியில் இருந்து பராமரிக்கப்பட்டது. நில உரிமையாளர்களின் செய்தித் தொடர்பாளராக, இவர் சிப்பாய் கலகத்தை கொள்கையளவில் எதிர்த்தார். பிரிட்டிசு அரசாங்கம் இவருக்கு 1866இல் சிஎஸ்ஐ என்ற பட்டத்தை வழங்கியது. [7]
நாடக அரங்கம்
தொகுமுதல் பெங்காலி நாடகங்களை உருசிய அறிஞரான ஜெராசிம் லெபடேவ் 1796இல் அரங்கேற்றத் தொடங்கினார். ஆனால் அவரது முன்னோடி முயற்சிகள் பலனளிக்கவில்லை. பிரசன்னா குமார் அதை தனது ககைகளில் எடுத்துக் கொண்டார். 1832ஆம் ஆண்டில், நர்கெல்டங்காவில் உள்ள தனது வீட்டில் ஒரு தற்காலிக நாடக அரங்கத்தை அமைத்தார். ஒரு சில ஆங்கில நாடகங்கள் மட்டுமே அங்கு அரங்கேற்றப்பட்டாலும், அது ஒரு புதிய தொடக்கமாக இருந்தது. [8]
குடும்பம்
தொகுஇவர் வாழ்நாள் முழுவதும் கிறிஸ்தவ நிறுவனங்களின் நடவடிக்கைகளை எதிர்த்தார். ஆனால் சிறந்த மாணவரான இவரது மகன் ஞானேந்திரமோகன் தாகூர் (1826-1890), 1851இல் கிறிஸ்தவத்திற்கு மாறி, பின்னர் கிருட்டிண மோகன் பானர்ஜியின் மகள் கமலமணியை மணந்தார். இங்கிலாந்து சென்று இலண்டனில் இந்துச் சட்டம் மற்றும் பெங்காலி பேராசிரியராக இருந்தார். அவர் முதல் இந்திய சட்டத்தரணியாகச் சட்டப் பயிற்சி செய்ய இந்தியா திரும்பினார். [9]
குறிப்புகள்
தொகு- ↑ Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in வங்காள மொழி), p313, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0
- ↑ Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in வங்காள மொழி), p313, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0ISBN 81-85626-65-0

- ↑ Sastri, Sivanath, History of the Brahmo Samaj, 1911-12/1993, p549, 557, Sadharan Brahmo Samaj, 211 Bidhan Sarani, Kolkata.
- ↑ Sengupta, Nitish, History of the Bengali-speaking People, 2001/2002, p227, UBS Publishers’ Distributors Pvt. Ltd., பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7476-355-4
- ↑ Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in வங்காள மொழி), p313, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0ISBN 81-85626-65-0
- ↑ Sengupta, Subodh Chandra and Bose, Anjali (editors), 1976/1998, Sansad Bangali Charitabhidhan (Biographical dictionary) Vol I, (in வங்காள மொழி), p313, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-85626-65-0ISBN 81-85626-65-0
- ↑ Raha, Kironmaoy, Calcutta Theatre 1835-1944, in Calcutta, the Living City, Vol I, edited by Sukanta Chaudhuri, pp 58-59, Oxford University Press, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-19-563696-1.