பிரசெல்சு தாக்குதல், 2017
பெல்ஜியம் நாட்டின் பிரசெல்சு நகரில் மத்திய தொடருந்து நிலையத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. 20 ஜூன் 2017 அன்று நடந்த இத்தாக்குதலில் பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. ரோந்துக் காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மூன்று முதல் நான்கு முறை சுட்டு தாக்குதல்தாரியைக் கொன்றனர். தாக்குதல்தாரியின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.[1]
பிரசெல்சு தாக்குதல், 2017 | |
---|---|
இடம் | பிரசெல்சு மத்திய தொடருந்து நிலையம், பிரசெல்சு, பெல்ஜியம் |
நாள் | 20 ஜூன் 2017 8:45 பிறபகல் |
தாக்குதல் வகை | குண்டுவெடிப்பு |
ஆயுதம் | வெடிபொருட்கள் |
இறப்பு(கள்) | 1 (சந்தேக நபர்) |
காயமடைந்தோர் | 0 |
தாக்கியோர் | அடையாளம் தெரியாத ஆண் நபர் |
தாக்குதல்
தொகுஉள்ளூர் நேரப்படி பிறபகல் 8:45 மணிக்கு 30 முதல் 35 வயது மதிக்கத்தக்க நபர் அல்லாஹூ அக்பர்[2][2][3][4] எனக் கோஷமிட்டபடி சிறு வெடிபொருள் ஒன்றை வெடிக்கச் செய்தார். தாக்குதல்தாரி அதன் பின்னர் நடுக்கூடத்திற்கு வரும்போது ரோந்துக்காவலர்களால் அடையாளம் காணப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்.[5] இவரது உடலைச் சோதனையிட்ட பின்னர் அவரிடம் சக்தி வாய்ந்த குண்டுகள் இருந்தன எனவும் அவற்றை வெடிக்கும் முயற்சி தோல்வியடைந்தது என்று ஊடகங்கள் தெரிவித்தன. இத்தாக்குதலைத் தீவிரவாதத் தாக்குதல் என வகைப்படுத்தியுள்ளனர்.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Brussels train station blast being treated as terror attack". ஏபி நியூஸ். பார்க்கப்பட்ட நாள் 21 சூன் 2017.
- ↑ 2.0 2.1 Germany, SPIEGEL ONLINE, Hamburg. "Großeinsatz nach Explosion: Soldat schießt Verdächtigen an Brüsseler Hauptbahnhof nieder - SPIEGEL ONLINE - Panorama". SPIEGEL ONLINE. பார்க்கப்பட்ட நாள் 2017-06-20.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link) - ↑ "Suspect shot after explosion at Brussels train station". Associated Press. June 20, 2017. https://apnews.com/466d04b4b20049239e426c317e820b63/Suspect-shot-after-explosion-at-Brussels-train-station.
- ↑ Michael Birnbaum and Annabell Van den Berghe. "Belgian soldiers shoot suspect after explosion at Brussels train station". Washington Post. பார்க்கப்பட்ட நாள் 2017-06-20.
{{cite web}}
: Cite has empty unknown parameter:|dead-url=
(help) - ↑ "Reiskoffer ontploft in Brussel-Centraal, verdachte man gedood door militairen" (in Dutch). Het Nieuwsblad. June 20, 2017 இம் மூலத்தில் இருந்து 2019-03-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190329013229/https://www.nieuwsblad.be/cnt/dmf20170620_02933407.