பிரஞ்சித் சிங்க ராய்
பிரஞ்சித் சிங்க ராய் (Pranjit Singha Roy) இந்தியாவின் திரிபுராவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற திரிபுரா சட்டமன்றத் தேர்தலில், கோமதி மாவட்டத்தில் உள்ள இராதாகிசோர்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.[1][2][3][4]
பிரஞ்சித் சிங்க ராய் Pranjit Singha Roy | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2023 | |
விவசாயம், சுற்றுலா, போக்குவரத்து-அமைச்சர் | |
பதவியில் 9 மார்ச்சு 2018 – 2023 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பிரஞ்சித் சிங்க ராய் திரிபுரா, இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
மந்திரி சபை | திரிபுரா அரசு |
2016ஆம் ஆண்டில், மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) உடன் இந்தியத் தேசிய காங்கிரசில் இணைந்ததால் கட்சியில் ஏற்பட்ட அதிருப்தியால், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசில் இணைந்த இந்தியத் தேசிய காங்கிரசின் ஆறு சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர்.[5]
ஆகத்து 2017-ல், அகில இந்திய திரிணாமுல் காங்கிரசிலிருந்து பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த ஆறு சட்டமன்ற உறுப்பினர்களில் இவரும் ஒருவர். இவர்கள் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த பின்னர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார்.[6]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Assembly Since 1963" (PDF). p. 50.
- ↑ MLAs refuse to accept Roy as CLP leader
- ↑ Congress hit by next big crisis in Tripura, 6 MLAs quit party
- ↑ My Neta
- ↑ Six Congress MLAs in Tripura join Trinamool
- ↑ "Recognise Ex-TMC MLAs as BJP Members in Tripura: BJP". பார்க்கப்பட்ட நாள் 23 September 2017.