பிரதாப் சிங், சதாரா

பிரதாப் சிங் போன்சலே (Pratap Singh Bhonsle) (18 சனவரி 1793 – 14 அக்டோபர் 1847) மராத்தியப் பேரரசின் இறுதி மன்னர் ஆவார். இவர் மராத்திய பேரரசை கிபி 1808 முதல் 1819 முடிய 11 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர்கள் இவரை பதவி நீக்கம் செய்யும் வரை சதரா இராச்சியத்தை 1839 முடிய ஆட்சி செய்தார். [1]

பிரதாப் சிங்
சதாராவின் மன்னர், மராத்தியப் பேரரசு
8-வது மராத்தியப் பேரரசர்
அரசுப்பிரதிநிதி3 மே 1808 – 1818
முன்னிருந்தவர்சதராவின் இரண்டாம் சாகு
பின்வந்தவர்பதவி இறக்கம்
சதாரா இராச்சியம்
ஆட்சிக்காலம்1818 – 5 செப்டம்பர் 1839
முன்னிருந்தவர்புதிய பதவி
பின்வந்தவர்ராஜா சாகாஜி
மரபுபோன்சலே
தந்தைஇரண்டாம் சாகு
தாய்கிரிஜாபாய் போன்சலே
பிறப்பு(1793-01-18)18 சனவரி 1793
அஜின்கியாத்திரா கோட்டை, சதாரா, (தற்கால மகாராட்டிரா மாநிலம், இந்தியா)
இறப்பு14 அக்டோபர் 1847(1847-10-14) (அகவை 54)
வாரணாசி, பிரித்தானிய கிழக்கிந்தியா (தற்கால வாரணாசி, உத்தரப் பிரதேசம், இந்தியா)
சமயம்இந்து சமயம்

பேரரசர் சிவாஜியின் போன்சலே குல வழித்தோன்றலான இவர், [2] சதாரா இராச்சியத்தை ஆண்ட மன்னர் இரண்டாம் சாகுவின் மூத்த மகன் ஆவர். 1839-இல் பிரித்தானிய கிழக்கிந்திய ஆட்சியாளர்களால் மன்னர் பதவி நீக்கப்பட்ட பிரதாப் சிங், ஆங்கிலேயர்கள் வழங்கிய ஓய்வூதியத்தை கொண்டு, தன் இறுதிநாள் வரை வாரணாசியில் வாழ்ந்து முடித்தார். இவருக்குப் பின் இவரது சகோதரர் அப்பா சாகிப் என்பவர் இராஜா சாகாஜி எனும் பெயருடன் சதாரா இராச்சியத்தை ஆண்டார்.[1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Kulkarni, Sumitra (1995). The Satara Raj, 1818-1848: A Study in History, Administration, and Culture. Mittal Publications. pp. 21–24. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-17099-581-4.
  2. Sarkar, Jadunath (1992). Shivaji and His Times (in ஆங்கிலம்). Orient Longman. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788125013471.
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chhatrapati Pratapsingh
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


மேலும் படிக்க

தொகு



"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாப்_சிங்,_சதாரா&oldid=3037388" இலிருந்து மீள்விக்கப்பட்டது