பிரதாப் ராய்சவுத்துரி

இந்திய இயற்பியலாளர்

பிரதாப் ராய்சவுத்துரி (Pratap Raychaudhuri) என்பவர் ஓர் இந்திய இயற்பியலாளர் ஆவார். இவர் 1971 ஆம் ஆண்டு திசம்பர் 13 ஆம் நாள் பிறந்தார். மும்பையிலுள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனத்தில் இவர் பணிபுரிந்தார். மீக்கடத்து திறனும் காந்தமும், மென் படலங்கள், போக்குவரத்து தொடர்பான நிறமாலையியல் முதலிய இயற்பியல் பிரிவுகளில் இவர் நிபுணத்துவம் பெற்றிருந்தார்[1]. இந்தியாவில் வழங்கப்படும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான உயர்ந்த அறிவியல் விருதான சாந்தி சுவரூப் பட்நாகர் விருது 2014 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது[2][3][4].

மேற்கோள்கள்

தொகு
  1. "Awardee Details: Shanti Swarup Bhatnagar Prize". Ssbprize.gov.in. 1971-12-13. பார்க்கப்பட்ட நாள் 2015-11-26.
  2. "Shanti Swarup Bhatnagar awards for 10 scientists". BusinessLine. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  3. "Dr. P.S.Ahuja Announces Shanti Swarup Bhatnagar Award 2014". Dr. P.S.Ahuja Announces Shanti Swarup Bhatnagar Award 2014. 26 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 September 2014.
  4. http://ssbprize.gov.in/WriteReadData/LatestUpdates/201409260153504671808ssb_awardees2014.pdf

புற இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதாப்_ராய்சவுத்துரி&oldid=2711459" இலிருந்து மீள்விக்கப்பட்டது