பிரதிபா ராய்

பிரதிபா ராய் (Pratibha Ray) இவர் ஒரு இந்திய கல்வியாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். 1943 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதியன்று, ஒடிசா மாநிலத்திலுள்ள ஜகத்சிங்பூர், பாலிக்குடா பகுதியின் ஒரு தொலைதூர கிராமத்தில் பிறந்தார்.[2] 1991இல் மூர்த்தி தேவி விருது வென்ற முதல் பெண்மணி ஆவார்.[3] இவர் சமகால இந்தியாவில் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளர் ஆவார். இவர் தனது தாய்மொழியான ஒடிய மொழியில் நாவல்கள் மற்றும் சிறுகதைகள் எழுதுகிறார். இவரது முதல் நாவல் "பர்ஷ பாஸ்ந்தா பிஷாகா" (1974) என்பது சிறந்த விற்பனையான புத்தகமாகும்[4]

பிரதிபா ராய்

கல்வி முதுகலை (கல்வி), முனைவர் (கல்வியியல்)[1]
கல்வி நிலையம் ரோவென்சா கல்லூரி
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
யஜ்னசெனி, ஷீலாபத்மா
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
ஜன்பித் விருது,
மூர்த்தி தேவி விருது

இவர் மேற்கொண்ட தேடலானது சமத்துவம், அன்பு, சமாதானம் மற்றும் ஒருங்கிணைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்தது. இவர் எழுதிய புத்தகத்தின் முதல் பதிப்பு இவருடைய ஒன்பது வயதில் வெளிவந்தது. வகுப்பு, ஜாதி, மதம் அல்லது பாலியல் பாகுபாடு இல்லாமல் சமத்துவம் அடிப்படையில் ஒரு சமூக ஒழுங்கிற்கு அவர் எழுதிய போது, சில விமர்சகர்கள் அவரை ஒரு கம்யூனிஸ்ட் என முத்திரை குத்தினர், மற்றும் சிலர் பெண்ணியவாதி என்று பெயரிட்டனர்.[5] ஆனால், "நான் ஒரு மனிதாபிமானியாக இருக்கிறேன், சமூகத்தின் ஆரோக்கியமான செயல்பாட்டிற்காக ஆண்கள் மற்றும் பெண்கள் வித்தியாசமாக உருவாக்கப்பட்டுள்ளனர், பெண்கள் சிறப்பு அம்சங்களுடன் மேலும் வளர வேண்டும்." என்று இவர் கூறுகிறார்.

அவரது திருமணத்திற்குப் பின்னரும் கூட அவரது எழுத்து வாழ்க்கையைத் தொடர்ந்தார். ஒடிசாவின் ஜகத்சிங்பூரின் சிறந்த பொறியாளரான தனது கணவர் மற்றும் மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார். அவர் கல்வியில் முதுகலை பட்டம் மற்றும் கல்வியியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். இவர் பழங்குடி மற்றும் குரோமினாலஜி ஆஃப் போண்டோ ஹைலேண்டர் என்ற ஒடிசாவின் பழங்குடியினரைப் பற்றிய ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.[6][7][8]

தொழில்தொகு

அவர் தனது வாழ்க்கையை ஒரு பள்ளி ஆசிரியராகத் தொடங்கினார், பின்னர் அவர் ஒன்பது ஆண்டுகளில் ஒடிசாவில் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் கற்பித்தல் பணியை மேற்கொண்டார். இவர் முனைவர் பட்டத்திற்கான ஆய்வு வழிகாட்டியாக உள்ளார் மற்றும் பல ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். ஒடிசா மாநில அரசுப்பணியாளர் ஆனையத்தின் உறுப்பினராக பணியாற்றிய பின்னர் விருப்ப ஓய்வுபெற்றார்,[9]

தழுவல்கள்தொகு

" யஜ்னசெனி" என்ற புதினத்தை சுமன் போக்ரெல் என்பவர் நேபாளி மொழியில் தனி நாடகமாகக் நடத்திக் காட்டியுள்ளார்.

விருதுகள் மற்றும் அங்கீகாரம்தொகு

 • 1985 - ஷீலாபத்மா எனற புதினத்திற்கு ஒடிசா சாஹித்ய அகாடமி விருது
 • 1990 – "யஜ்னசெனி" என்ற புதினத்திற்கு 'சரளா விருது'
 • 1991 – "யஜ்னசெனி" என்ற புதினத்திற்கு ' மூர்த்தி தேவி[10]
 • 2000 – 'அமிர்த கீர்த்தி புரஷ்கார்'[11]
 • 2007 – இலக்கியம் மற்றும் கல்விக்காக இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருது.
 • 2011 – 'ஞானபீட விருது'[12]
 • 2013 – ஒடிசா அரசின் இலக்கியத்திற்கான "வாழும் ஆளுமை விருது" [13]

மேற்கோள்கள்தொகு

 1. Gulati, Varun (2009). "Language in India". languageinindia.com. 28 December 2012 அன்று பார்க்கப்பட்டது. an M.A. in Education and PhD in Educational Psychology
 2. "Odia writer Pratibha Ray named for Jnanpith Award : East, News – India Today". indiatoday.intoday.in. 2012. 28 December 2012 அன்று பார்க்கப்பட்டது. She was born to a Gandhian teacher on January 21, 1943, at Alabol village.
 3. Balakrishnan, Hariharan (2007). "The Hindu : Literary Review / Personality : 'The sky is not the limit'". hindu.com. 30 ஏப்ரல் 2007 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 December 2012 அன்று பார்க்கப்பட்டது. first woman to win the Jnanpith Moorti Devi Award. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 4. "Odisha: Eminent fiction writer Dr Pratibha Ray to receive coveted Jnanpith Award, Oriya Orbit". orissadiary.com. 2012. 11 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 திசம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது. her first novel as a novice, titled "Barsha-Basanta-Baishakha" (The Rain, Spring and Summer, 1974) which immediately captured the hearts of Odia readers. Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 5. Panda Mishra, Anita (May 2013). "A literary crusader". atelierdiva.in. 2018-01-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 6. Ranjan Sahu, Priya (May 2014). "Bondas, a primitive tribe in Odisha hills, get their first MLA". hindustan times.
 7. "Primitive Bonda Tribes of Odisha & Andhra Pradesh". sillyfox.in. November 2017. 2018-08-01 அன்று மூலம் பரணிடப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 8. Sarit Kumar Chaudhuri, Sucheta Sen Chaudhuri (2005). Primitive Tribes in Contemporary India: Concept, Ethnography and Demography, Volumen 1 Primitive Tribes in Contemporary India: Concept, Ethnography and Demography. Mittal Publications. பக். 320. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788183240260. 
 9. Parida, Saumya (2012). "Odisha: Eminent fiction writer Dr Pratibha Ray to receive coveted Jnanpith Award". indiaeducationdiary.in. 30 ஜூன் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 திசம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது. She took voluntary retirement as a Professor of Education from State Government Service in 1998 and joined as Member, Public Service Commission of Odisha State Cite uses deprecated parameter |deadurl= (உதவி)
 10. "Manorama Online | Odia writer Pratibha Ray selected for Jnanpith award". english.manoramaonline.com. 2012. 11 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 December 2012 அன்று பார்க்கப்பட்டது. Yjnaseni (1985), which won Jnanpith Trust's Moorti Devi Award in 1991 Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 11. "Prathiba Ray to receive Amrita Keerthi – Amma, Mata Amritanandamayi Devi". amritapuri.org. 2006. 28 December 2012 அன்று பார்க்கப்பட்டது. Smt. Pratibha Ray will be awarded the Ashram's Amrita Keerti Puraskar for her meritorious contributions to the field of Indian literature.
 12. "Oriya novelist and academician Pratibha Ray wins 2011 Jnanpith Award". ibnlive.in.com. 2012. 2 ஜனவரி 2013 அன்று மூலம் பரணிடப்பட்டது. 28 December 2012 அன்று பார்க்கப்பட்டது. it was decided that Ray, 69, will be the winner of the 2011 Jnanapith Award. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
 13. Nayak, Anuja. "OdishaDiary Conferred prestigious Living Legend, Odisha Inc and Youth Inspiration Awards". OdishaSamachar. Archived from the original on 3 மார்ச் 2016. https://web.archive.org/web/20160303224910/http://eodishasamachar.com/en/odishadiary-conferred-prestigious-living-legend-odisha-inc-and-youth-inspiration-awards/. பார்த்த நாள்: 28 January 2015. 

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிபா_ராய்&oldid=3428856" இருந்து மீள்விக்கப்பட்டது