பிரதிமா பூரி

பிரதிமா பூரி இந்தியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர். 1965ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி அன்று தூர்தர்ஷன் தொலைக்காட்சி தனது முதல் ஒளிபரப்பை மேற்கொண்டது. 5 நிமிடங்கள் மட்டுமே செய்யப்பட்ட அந்த சோதனை ஒளிபரப்பில் செய்திக் குறிப்புக்களை பிரதிமா பூரி வாசித்தார். இதன் மூலம் இந்தியாவின் முதல் செய்தி வாசிப்பாளர் என்ற பெருமையை பிரதிமா பூரி பெற்றார்.[1]

பிரதிமா பூரி
பிறப்புவித்யா ராவத்
ஷிம்லா, இமாச்சலப் பிரதேசம், இந்தியா
இறப்பு(2007-07-29)29 சூலை 2007
பணிதூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
1958 – 1970

வாழ்க்கை குறிப்பு தொகு

இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சிம்லா நகரில் வித்யா ராவத் என்ற பெயரில் பிறந்த இவர் தனது பட்டப்படிப்பிற்கு பின் அகில இந்திய வானொலியில் பணியில் சேர்ந்தார். 2007 ஆம் ஆண்டு காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. https://www.thebetterindia.com/164932/dd-woman-newsreader-pratima-puri-india-news/
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதிமா_பூரி&oldid=3697101" இலிருந்து மீள்விக்கப்பட்டது