பிரதியுசா பொறியியல் கல்லூரி

சென்னை பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரி

பிரதியுஷா பொறியியல் பொறியியல் கல்லூரி (Prathyusha Engineering College) என்பது தமிழ்நாட்டின், பூந்தமல்லியில் உள்ள பொறியியல் கல்லூரி ஆகும். இக்கல்லூரியானது பூந்தமல்லியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் பூந்தமல்லிக்கும் திருவள்ளூருக்கும் இடையில் அமைந்துள்ளது. இக்கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவரான, திரு இராஜா ராவால் நிறுவப்பட்டது. இந்த கல்லூரி என்ஏஏசி-ஆல் தரச்சான்று அங்கீகாரம் பெற்றுள்ளது. மேலும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டு, ஏஐசிடிஇ-ஆல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் யுஜிசியால் பிரிவு 2 எஃப் / 12 பி இன் கீழ் அங்கீகாரம் பெற்றுள்ளது. [1]

பிரதியுசா பொறியியல் கல்லூரி
முந்தைய பெயர்கள்
Prathyusha Institute of Technology and Management
குறிக்கோளுரைShradhavan Labhyathe Gnanam
வகைசுயநிதி கல்லூரி
உருவாக்கம்2001
நிறுவுனர்திரு பி. இராஜா ராவ்
தலைவர்திரு பி. இராஜா ராவ்
முதல்வர்முனைவர் இரமேஷ் பி.எல்.என்
CEOதிருமதி பி. பிரதியுசா
அமைவிடம்
திருவள்ளூர், பூந்தமல்லி
அரண்வயல் குப்பம்
, ,
13°05′32″N 79°58′23″E / 13.092149°N 79.973044°E / 13.092149; 79.973044
வளாகம்33 ஏக்கர்கள் (0.13 km2)
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்Official website

வரலாறு

தொகு

பிரதியுஷா பொறியியல் கல்லூரி 2001 ஆம் ஆண்டில் பிரத்யுஷா கல்வி அறக்கட்டளையின் சார்பில் அறக்கட்டளையின் தலைவரும் பிரதியுஷா குழும நிறுவனங்களின் தலைவரான பி. ராஜராவால் நிறுவப்பட்டது. இக்கல்லூரியானது பி.இ. பாடப்பிரிவில் மின்னணு மற்றும் தொடர்பியல் பொறியியல், கனிணி அறிவியல் மற்றும் பொறியியல், மின் மற்றும் மின்னணுவியல் பொறியியல், குடிசார் பொறியியல், இயந்திரப் பொறியியல், பி.டெக். பாடத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிர் தொழில்நுட்டபம் ஆகிய இளநிலைப் படிப்புகளும் - முதுநிலை படிப்புகளில் கணினி செயலி, ஆற்றல் மின்னணு மற்றும் செயலி, ஸ்டர்க்சல் இஞ்சினியரிங், கனிணி அறிவியல் மற்றும் பொறியியல், எம்.டெக் உயிர் தொழில்நுட்பம் போன்ற பாடங்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைந்த 497 கல்லூரிகளில், இக்கல்லூரியானது கல்வி செயல்திறனில் 5 வது இடத்தைப் பெற்றுள்ளது. இந்தக் கல்லூரியானது மாணவர்களின் திறன்களை அடையாளம் கண்டு, உலகளாவிய தரத்திற்கு இணையாக அவர்களை தொழில் வளர்ச்சி நோக்கி மேம்படுத்துகிறது.

ஆண்டு அங்கீகாரங்கள்
2001-02 ஏஐசிடிஇ மற்றும் சென்னை பல்கலைக்கழகம்
2002-03 அண்ணா பல்கலைக்கழக அங்கீகாரம்
2007-08 ஐஎஸ்ஓ தர அமைப்பு நடைமுறைப்படுத்தல் - ஐஎஸ்ஓ 9000: 2000
2008-09 எம்பிஏ அங்கீகாரம் - இஇஇ, இசிஇ, உயிர் தொழில்நுட்பம் (3 ஆண்டுகள்)
2012-13 ஐஎஸ்ஓ 9001 செயல்படுத்தல்  : 2008
2013-14 நிரந்தர அங்கிகாரம் - இஇஇ, இசிஇ, ஐடி, உயிர் தொழில்நுட்பம், இசிஇ
2014-15 என்பிஏ-க்கு விண்ணப்பிக்கப்பட்டது
2015-16 யுஜிசி அங்கீகாரம் 2 (எஃப்) & 12 (பி)
2017-18 இசிஇ, சிஎஸ்இ, உயிர் தொழில்நுட்பம், இஇஇ க்கான என்பிஏ அங்கீகாரம்

குறிப்புகள்

தொகு
  1. "Prathyusha Engineering College". TNEACounselling.com. பார்க்கப்பட்ட நாள் 2014-05-24.

2. https://www.thehindu.com/news/cities/chennai/research-and-development-centre-inaugurated/article3900771.ece, September 15, 2012,the Hindu.com,Research and Development Centre inaugurated
3. http://www.newindianexpress.com/cities/chennai/2015/may/11/Prathyusha-to-Award-Toppers-759012.html,11th[தொடர்பிழந்த இணைப்பு] May 2015, Prathyusha to Award Toppers- The New Indian Express
4. https://www.careers360.com/colleges/prathyusha-engineering-college-tiruvallur/reviews, Students reviews[தொடர்பிழந்த இணைப்பு], College ranking 3.65/5./
5 https://www.thehindu.com/news/cities/chennai/Chennai-team-comes-second-in-Microsoft-contest/article16205097.ece, Chennai team comes second in Microsoft contest, The Hindu.com, July 22, 2010
6. Solar Energy Centre inaugurated, http://www.newindianexpress.com/cities/chennai/ 2014/ nov/13/Solar-Energy-Centre-Inaugurated-681868.html, The New Indian Express, 12 November 2014

வெளி இணைப்புகள்

தொகு