பிரத்யுமன் சிங் லோதி
இந்திய அரசியல்வாதி
குன்வர் பிரத்யுமன் சிங் லோதி (Kunwar Pradyuman Singh Lodhi) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். இவர் இந்தோரியா அரச குடும்பத்தினரின் உறுப்பினரும் தலைவரும் ஆவார். 1857 ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக புரட்சி செய்த இந்தோரியாவின் அரசன் கிசோர் சிங் லோதியின் வழித்தோன்றலாக இவர் அறியப்படுகிறார். மல்காரா தொகுதியிலிருந்து மத்திய பிரதேச சட்டமன்றத்திற்கு இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக மத்தியப் பிரதேச சட்டப் பேரவையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக இருந்தார். 2020 ஆம் ஆண்டு சூலை மாதத்தில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலகி, அதே நாளில், இவர் பாரதிய சனதா கட்சியில் சேர்ந்தார்.[2][3][4] 2023 சட்டமன்றத் தேர்தல் வேட்பாளராக பாரதிய சனதா கட்சி அறிவித்துள்ளது.
பிரத்யுமன் சிங் லோதி Pradyuman Singh Lodhi | |
---|---|
உறுப்பினர், மத்தியப் பிரதேசச் சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2018 | |
முன்னையவர் | இரேகா யாதவ் |
தொகுதி | மல்காரா |
தனிப்பட்ட விவரங்கள் | |
அரசியல் கட்சி | பாரதிய சனதா கட்சி |
பிற அரசியல் தொடர்புகள் | இந்திய தேசிய காங்கிரசு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "MP: Another Congress MLA resigns to join BJP; 4th in 2 weeks". India Today. பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
- ↑ "Why the Congress continues to lose MLAs in MP". India Today. பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
- ↑ "Another jolt for MP Congress as party loses its third MLA to BJP in two weeks". New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.
- ↑ "Madhya Pradesh MLA Kunwar Pradyumna Singh Lodhi quits Congress, joins BJP". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 30 August 2020.