பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம்
பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் எனும் நூல் பழ. நெடுமாறனால் எழுதப்பட்டு 2012 இல் வெளியிடப்பட்டது. இந்நூல் பிரபாகரனது வாழ்க்கை வரலாற்றை மட்டும் விபரிக்காது, பிரபாகரன் எப்படி போராளியாக உருவெடுக்கிறார் என்பதை விளக்குகிறது. ஒரு தலைவன் எப்படி உருவாகிறான் என்பதை உருவகப்படுத்தும் புத்தகங்களில் ஒன்றான ஹென்றி வோல்கவ் எழுதிய "மார்க்ஸ் பிறந்தார்" எனும் புத்தகம்[2] மற்றும் அமெரிக்க கம்யூனிஸ்டான ஜான் ரீட் எழுதிய "10 நாட்கள்" ஆகிய புத்தகங்களுடன் இது ஒப்பிடப்படுகின்றது.[3]
பிரபாகரன் - தமிழர் எழுச்சியின் வடிவம் | |
நூலாசிரியர் | பழ. நெடுமாறன் |
---|---|
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வகை | வாழ்க்கை வரலாறு |
வெளியீட்டாளர் | தமிழ்க்குலம் |
வெளியிடப்பட்ட நாள் | 2012[1] |
பக்கங்கள் | 1208 |