பிரபா மல்லிகார்ச்சூன்
இந்திய அரசியல்வாதி
மருத்துவர் பிரபா மல்லிகார்ச்சூன் (Dr. Prabha Mallikarjun) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1976ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 15ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கர்நாடக மாநிலம் தாவண்கரே நகரத்தைச் சேர்ந்த இவர் 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் சார்பாக தாவண்கரே மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். தகுதியின் அடிப்படையில் இவர் ஒரு பல் மருத்துவரும் சுகாதார ஆர்வலரும் ஆவார்.
மருத்துவர். பிரபா மல்லிகார்ச்சூன் Prabha Mallikarjun | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 15 மார்ச்சு 1976 கக்கரகொல்ல கிராமம், தாவண்கரே மாவட்டம், கருநாடகம், இந்தியா | ||||||||
கல்வி |
| ||||||||
படித்த கல்வி நிறுவனங்கள் | தாவண்கரே பல்மருத்துவக் கல்லூரி, | ||||||||
பணி | பல்மருத்துவர் | ||||||||
வாழ்க்கைத் துணை | ஷாமனூர் மல்லிகார்ஜூன் | ||||||||
|
பிரபா மல்லிகார்ச்சூன் கருநாடக அரசின் சுரங்கங்கள், புவியியல் மற்றும் தோட்டக்கலை அமைச்சரான எசு. எசு. மல்லிகார்ச்சூனின் மனைவியாவார். முன்னாள் அமைச்சரும் தாவண்கரே தெற்கு சட்டமன்றத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான மூத்த காங்கிரசு தலைவர் சாமனுரு சிவசங்கரப்பாவின் மருமகளுமாக அறியப்படுகிறார்.[1]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Women take on mantle of Davengere's 2 big political families". www.deccanherald.com. 21 March 2024. பார்க்கப்பட்ட நாள் 21 March 2024.