பிரமயுகம்
பிரமயுகம் ( Bramayugam ) [7] என்பது 2024 ஆம் ஆண்டு வெளியான மலையாள மொழி திகில் திரைப்படமாகும். இயக்குநர் இராகுல் சதாசிவன் எழுதி இயக்கியிருந்தார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் வை நொட் ஸ்டூடியோஸ்[8] இணைந்து தயாரித்திருந்தது. இப்படத்தில் மம்மூட்டி, சித்தார்த் பரதன், அர்ஜுன் அசோகன் ஆகியோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கேரளாவின் புனிதமான மர்மம், புராண மற்றும் நாட்டுப்புறக் கதைகளின் கூறுகளைக் கொண்டுள்ளது.[9] [10]
பிரமயுகம் | |
---|---|
இயக்கம் | இராகுல் சதாசிவன் |
தயாரிப்பு |
|
திரைக்கதை |
|
இசை | கிரிஸ்டோ சேவியர்[1] |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | சேனாத் ஜலால் |
படத்தொகுப்பு | சபீக் முகமது அலி |
கலையகம் |
|
வெளியீடு | பெப்ரவரி 15, 2024 |
ஓட்டம் | 140 நிமிடங்கள்[2] |
நாடு | இந்தியா |
மொழி | மலையாளம்[3] |
ஆக்கச்செலவு | ₹27.73 கோடிகள்[4] |
மொத்த வருவாய் | ₹85 கோடிகள்[5][6] |
நடிகர்கள்
தொகு- கொடுமண் பொட்டியாக மம்மூட்டி
- பாணன் தேவனாக அர்ஜுன் அசோகன்
- கொடுமண் பொட்டியின் சமையல்காரனாக சித்தார்த் பரதன்
- யட்சினியாக அமல்டா லிஸ்
- தேவனின் நண்பன் கோரனாக மணிகண்டன் ஆர்.ஆச்சாரி
கதை
தொகு17 ஆம் நூற்றாண்டில் மலபாரில், தேவன் மற்றும் கோரன் ஆகியோர் பொன்னானியில் போர்த்துகீசிய அடிமை வர்த்தகத்தின் பிடியில் இருந்து தப்பி கிழக்கு நோக்கி ஓடுகின்றனர். இரவில், அவர்கள் பாரதப்புழா ஆற்றின் கரையில் தங்குகின்றனர். ஆனால் குரான் ஒரு யட்சினியால் கொல்லப்படுகிறான். காலையில் எழுந்த தேவன் அங்கேயிருக்கும் கைவிடப்பட்ட ஒரு வீட்டை நோக்கி செல்கிறான். பசிக்கு தென்னை மரத்தில் தேங்காய் திருடும் போது, வீட்டின் சமையல்காரரால் பிடிக்கப்பட்டு வீட்டின் உரிமையாளரான கொடுமண் பொட்டியின் முன் அழைத்து வரப்படுகிறான். தேவன் ஒரு "பாணன்" என்பதை அறிந்ததும், ஒரு பாடலைப் பாடும்படி அவர் கேட்டுக்கொள்கிறார்.
தேவனின் பாடலை பாராட்டிய கொடுமண் பொட்டி அவன் வெளியேற விரும்பினாலும், இரவில் தங்குமாறு வலியுறுத்துகிறார். அதற்கு பிறகு தேவனுக்கு என்ன ஆனது என்பதை மீதிக் கதை கூறுகிறது.
வெளியீடு
தொகுஇப்படம் 17ஆம் நூற்றாண்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருப்பதாலும், வரலாற்று நாடகத் திரைப்பட என்பதாலும், கருப்பு-வெள்ளை வடிவில் இது உருவாக்கப்பட்டது.[11]படம் 15 பிப்ரவரி 2024 அன்று வடிவத்தில் வெளியிடப்பட்டது. [12] நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு, ஒலி வடிவமைப்பு, பின்னணி இசை மற்றும் தயாரிப்பு வடிவமைப்பு ஆகியவற்றிற்காக இது விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டைப் பெற்றது. [13] [14] [15]
இந்தப் படத்தை ஒரே நேரத்தில் ஐந்து இந்திய மொழிகளில் வெளியிட்டனர்.[16] படம் திரையரங்க வசூலில் வெற்றியைப் பெற்றது. ₹85 கோடிக்கு மேல் வசூலித்தது. மேலும் 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படம் ஆனது.
இந்தத் திரைப்படம் 15 மார்ச் 2024 முதல் சோனி லிவ் மேலதிக ஊடக சேவையில் திரையிடப்பட்டது.[17]
இசை
தொகுபடத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருந்தார். தின் நாத் புத்தஞ்சேரி, அம்மு, மரியா அலெக்ஸ் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர். [18] [19]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Christo Xavier: After listening to the OST of 'Bramayugam'".
- ↑ "Bramayugam The movie has a running time of 140 minutes.". https://cbfcindia.gov.in/cbfcAdmin/search-result.php?recid=Q0EwOTI1MDEyMDI0MDAwNDA.
- ↑ "Released in 5 Indian languages including Malayalam".
- ↑ "Mammootty's 'Bramayugam' reveals budget of Rs 27.73 crore". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mammoottys-bramayugam-reveals-budget-of-rs-27-73-crore/amp_articleshow/107478645.cms#amp_tf=From%20%251$s&aoh=17082463150705&referrer=https://www.google.com.
- ↑ "Bramayugam Box Office collection – Mammootty's horror film crosses 85 crore mark; surpasses Abraham Ozler". The Free Press Journal (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-03-11.
- ↑ "Mammootty’s ‘Bramayugam’ collects over Rs 60 crore worldwide". The Times of India. 2024-03-06. https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mammoottys-bramayugam-collects-over-rs-60-crore-worldwide/articleshow/108269275.cms.
- ↑ அதிகாரப்பூர்வ இணையதளம்
- ↑ "Mammootty to play Arjun Ashokan's villain in Rahul Sadasivan's upcoming horror thriller". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-20.
- ↑ "'Bramayugam. But this film is designed as a fantasy, mystery tale with a few mildly scary moments thrown in". பார்க்கப்பட்ட நாள் 2024-02-15.
- ↑ "'Bramayugam' Mammootty's miraculous run continues with the bleakest Indian horror film in years, a take-no-prisoners tirade against humanity". பார்க்கப்பட்ட நாள் 2024-02-22.
- ↑ "I could never conceive 'Bramayugam' in colour: Director Rahul Sadasivan". Onmanorama. பார்க்கப்பட்ட நாள் 2024-02-20.
- ↑ "Bramayugam’ To Be Released In Black-And-White Format". https://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/mammoottys-bramayugam-release-date-blackandwhite-format-news/articleshow/107421699.cms.
- ↑ "Bramayugam movie review: A terrific and terrifying Mammootty leads Malayalam's 'horror cinema peaked here' moment". 15 February 2024. Archived from the original on 15 February 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-02-16.
- ↑ "Bramayugam X reviews: Mammootty gives a standout performance". 15 February 2024. Archived from the original on 15 February 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-02-16.
- ↑ "'Bramayugam' movie review: Mammootty's performance elevates this middling film on the evils of unrestricted power". https://www.thehindu.com/entertainment/movies/bramayugam-movie-review-mammoottys-performance-elevates-this-middling-film-on-the-evils-of-unrestricted-power/article67848964.ece/amp.
- ↑ "Mammootty kicks off Rahul Sadasivan's directorial 'Brammayugam". Bollywood Hungama. 2023-08-17. Archived from the original on 2023-08-25. பார்க்கப்பட்ட நாள் 2023-08-25.
- ↑ "'Bramayugam' OTT: Mammootty's Horror Film Starts Streaming Online". Times of India. பார்க்கப்பட்ட நாள் 15 March 2024.
- ↑ "Mammootty-starrer Bramayugam's Soundtrack Sets The Tone For An Eerie Tale". News18 (in ஆங்கிலம்). 2024-01-27. பார்க்கப்பட்ட நாள் 2024-02-20.
- ↑ "Bramayugam soundtrack gets a release date; Mammootty drops a major update". OTTPlay (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-02-20.