பிரம்மன் கோயில், புஷ்கர்

பிரம்மன் கோயில், புஷ்கர் (Brahma Temple, Pushkar) ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள புஷ்கர் நகரில் உள்ளது. புஷ்கர் ஏரிக்கரையோரத்தில் அமையப்பெற்றிருப்பது, இத்திருக் கோயிலின் சிறப்பு. நான்முக கடவுளான பிரம்மாவே இந்த கோயிலின் மூலவராவார். உலகிலுள்ள மிக சில பிரம்மா கோயில்களில் இதுவும் ஒன்று.

பிரம்மன் கோயில், புஷ்கர்
பிரம்மன் கோயில், புஷ்கர் is located in இராசத்தான்
பிரம்மன் கோயில், புஷ்கர்
Location in Rajasthan
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:ராஜஸ்தான்
மாவட்டம்:அஜ்மீர்
ஆள்கூறுகள்:26°29′14″N 74°33′15″E / 26.48722°N 74.55417°E / 26.48722; 74.55417
கோயில் தகவல்கள்
மூலவர்:பிரம்மா
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:ராஜஸ்தானி

இத்திருக்கோயில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த கோயிலின் கருவறையில், பிரம்ம தேவர் தனது இரண்டாவது மனைவி தேவி காயத்ரியுடன் காட்சியளிக்கிறார். கார்த்திகை தீபத்தின் போது ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருவார்கள்.

புராணக்கதை தொகு

இந்து மத வேதாங்களின் ஒன்றான 'பத்ம புராணத்தின்' படி, வஜ்ரனபா என்னும் அரக்கன், தனது பிள்ளைகளான மனிதர்களைச் சித்திரவாதம் செய்வதை கண்ட பிரம்ம தேவர், தனது ஆயுதம் தாமரையை கொண்டு அந்த அரக்கனை கொன்றார். 'தாமரை ஆயுதத்தை' எய்தபோது, அதனுடைய இதழ்கள் பூலோகத்தில் விழுந்தன. இதனால் மூன்று இடங்களில் எரிகள்: புஷ்கர் ஏரி/ஜெயஷ்ட புஷ்கர் (முதல்/பெரிய ஏரி), மத்திய புஷ்கர் (நடு ஏரி) மற்றும் கனிஷ்ட புஷ்கர் (தாழ்ந்த ஏரி) உருவானது. [1]

பிரம்ம தேவர், மக்களின் நலன் கருதி அங்கே ஒரு யாகம் நடத்த விரும்பினார். யாகம் நடக்கும் போது, கொடிய அரக்கர்களிடமிருந்து காக்க, சுற்றியும் மலைகளை: வடத் திசையில் நீலகிரி மலையயும், தெற்கு திசையில் ரத்தினகிரி மலையயும், கிழக்கு திசையில் சூர்யகிரி மலையயும் மற்றும் மேற்கு திசையில் சொன்சூர மலையயும் எழுப்பினார். இந்த மலைகளில் காவலர்களாக் தேவர்களை நியமித்தார்.

பின்னர், யாகம் தொடங்கியது. யாகத்தின் நடுவே பிரம்மனின் மனைவி, சாவித்ரி/சரசுவதி 'அஹுதீ' தர வேண்டும். அச்சமயம் சாவித்ரி தேவி அங்கே இல்லை. தன் தோழிகள் தேவி லட்சுமி, தேவி பார்வதி மற்றும் தேவி இந்திராணியை யாகத்திற்கு அழைக்க சென்றிருந்தார். பொருமை காக்காமல் பிரம்மதேவன், அங்கே இருந்த 'குஜர்' குலத்தை சேர்ந்த 'காயத்ரியை' மணந்து கொண்டு, யாகத்தை முடித்தார். தேவி சாவித்ரி தனது தோழிகளுடன் யாகத்துக்கு வந்தடைந்தார். அப்போது, காயத்ரி தேவி பிரம்ம தேவனுடன் 'அமுதபானைக்' கொண்டு நின்றிருந்ததை கண்டு கோபம் கொண்டார். சினத்தில் தேவி சாவித்ரி, 'பிரம்ம தேவன் எங்கும் வழிபட மாட்டார்' என்று சாபம் அளித்தார். யாகத்தால் வரம் பெற்ற தேவி காயத்ரி, இந்த சாபத்தை, 'பிரம்ம தேவன், புஷ்கரில் மட்டும் வழிபடுவார்' என்று மாற்றி அமைத்தாள்.

சினங்கொண்ட தேவி சாவித்ரி, ரத்னகிரி மலைக்குள் புகுந்து நீருற்று ஆனார். பின்னர். அது இன்றும் உள்ளது, 'சாவித்ரி ஜர்னா' என்று அழைக்கப்பட்டு வருகிறது. தேவியின் நினைவாக அங்கே ஒரு கோயில் எழுப்பினர். [2]

வரலாறு தொகு

இத்திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இதனை, விசுவாமித்ரர் கட்டியதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. 17ம் நூற்றாண்டில், முகலாய மன்னர் அவரங்கசீப் ஆட்சியில் பல இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அதில் இதுவும் ஒன்று. பின்னர் இது புதுப்பிக்கப்பட்டது.

வழிபாடு நேரங்கள் தொகு

இத்திருக்கோயிலில், பிரம்மனை வழிபடும் நேரங்கள் [3]

  • குளிர்காலம் : காலை 6:30 முதல் இரவு 8:30 வரை
  • வெயில்காலம் : காலை 6:00 முதல் இரவு 9:00 வரை

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரம்மன்_கோயில்,_புஷ்கர்&oldid=3802759" இலிருந்து மீள்விக்கப்பட்டது