பிரம்மபுத்திரா கடற்கரை திருவிழா

குவஹாத்தியில் பிரம்மபுத்திரா கடற்கரையில் நடைபெறும் ஒரு திறந்தவெளி திருவிழா


பிரம்மபுத்திரா கடற்கரை கொண்டாட்டம் என்பது குவஹாத்தியில் பிரம்மபுத்திரா ஆற்றின் கடற்கரை பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெறும் ஒரு திறந்தவெளி திருவிழா ஆகும். இது ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதத்தில் அஸ்ஸாமில் அறுவடைத் திருவிழாவான மாக் பிஹுவுடன் இணைந்து நடைபெற்று வருகிறது. [1] [2] இது இந்தியாவின் தென் மாநிலங்களில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் இருந்து கருப்பொருளை பெற்று, அஸ்ஸாம் மாநிலத்தின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பிரதிநிதித்துவப்படுத்துவது மற்றும் நவீனத்துவதுடன் கொண்டாடப்படும் சங்கமத்திருவிழா ஆகும். [1] இந்த விழாவின் நோக்கம் உள்நாட்டு கலாச்சாரம், கைவினைப்பொருட்கள் மற்றும் அசாமின் பாரம்பரிய விளையாட்டுகளை மற்ற மாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் பிரபலப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.

பிரம்மபுத்திரா கடற்கரை கொண்டாட்டம்
நாட்கள்ஜனவரி
காலப்பகுதிஆண்டுதோறும்
அமைவிடம்(கள்)குவஹாத்தி, அஸ்ஸாம்

விழா ஏற்பாட்டாளர்கள்

தொகு

அசாம் மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் (ATDC) இணைந்து குவஹாத்தியில் உள்ள அசாம் படகுப் பந்தயம் மற்றும் படகோட்டம் சங்கம் (ABRRA) இந்த விழாவை ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது. [1] [2]

நிகழ்வுகள்

தொகு

குறிப்பிட்ட காலங்களில், கடற்கரை முழுவதிலும் கண்காட்சிகள் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கேற்ப அரங்குகள் அமைக்கப்படுகின்றன. [1] இந்த திருவிழாவில் கடற்கரை கிரிக்கெட்,கடற்கரை வாலிபால், வாட்டர் ராஃப்டிங், கேனோயிங் மற்றும் விண்ட் சர்ஃபிங், உறைபனிச்சறுக்கு, கயாக்கிங் மற்றும் ஏரோ விளையாட்டுகளான பலூனிங், பாராகிளைடிங் மற்றும் ஹேங் கிளைடிங் போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும். பார்வையாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம். யானைப் பந்தயம், முட்டை உடைத்தல் மற்றும் சேவல் சண்டை போன்ற பாரம்பரிய விளையாட்டுகளும் மேற்சொல்லப்பட்ட நவீன மற்றும் தொழில்நுட்ப மேம்பட்ட விளையாட்டுகளுடன் நடத்தப்படுகின்றன. குழந்தைகள் பங்கேற்கும் வகையில் அமர்ந்து படம் வரைதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் பட்டம் பறத்தல் போன்ற போட்டிகளும் அவர்களுக்காகவே நடத்தப்படுகின்றன. பாரம்பரிய கைவினைப் பொருட்களின் கண்காட்சியும் திருவிழாவின் ஒரு பகுதியாக உள்ளது. [1]

மேலும் பார்க்கவும்

தொகு
  • அஸ்ஸாமின் கலாச்சாரம்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 "Brahmaputra Beach Festival". Maps of India. Archived from the original on 14 January 2011. பார்க்கப்பட்ட நாள் 27 December 2009.
  2. 2.0 2.1 "Brahmaputra Festival". Bharat Online. பார்க்கப்பட்ட நாள் 27 December 2009.