பிரம்மராஜன்
பிரம்மராஜன் என்பவர் தமிழின் நவீனக் கவிஞர்களுள் ஒருவர். மீட்சி என்னும் இலக்கிய இதழை நடத்தியவர்.[1] பல கவிதைத் தொகுதிகள் வந்துள்ளன். அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் தொகுப்பைக் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அரசு கலைக்கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். அறிந்த நிரந்தரம் என்ற கவிதைத் தொகுப்பின் வழியாக இலக்கிய உலகிற்கு அறிமுகமாகி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
1953ஆம் ஆண்டு பிறந்த பிரம்மராஜனின் இயற்பெயர் ஆ. ராஜாராம். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். தர்மபுரி அரசுக் கல்லூரியில் ஆங்கிலத்துறைத் தலைவராக இருந்தவர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். இதழாளர். கட்டுரையாளர் மற்றும் விமர்சகர். இதுவரை 5 கவிதைத்தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.
இலக்கியப் பணிகள்
தொகுகவிஞர் ஆத்மநாமின் மரணத்திற்குப் பிறகு அவரது கவிதைகளை தொகுத்து பதிப்பித்து ஆத்மநாமின் கவி ஆளுமையை வெளி உலகிற்கு காட்டி நிலைநிறுத்தினார். இத்தாலிய எழுத்தாளரான இடலோ கால்வினோவின் சிறுகதைகளை பிரம்மராஜன் மொழிபெயர்த்து 2003 இல் தொகுப்பாக வெளியிட்டார்.[2] மேலும் அவர் கால்வினோவின் முதன்மையான கட்டுரையான செவ்வியல் படைப்புகளை ஏன் வாசிக்கவேண்டும் என்னும் கட்டுரையையும் மொழிபெயர்தார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "இரண்டாயிரத்துக்குப் பிறகு நவீனக் கவிதைகள் பலவீனமாகிவருகின்றன!- பிரம்மராஜன் பேட்டி". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/literature/572387-brammarajan-interview.html. பார்த்த நாள்: 16 May 2024.
- ↑ "கால்வினோ கதைகள் – பிரம்மராஜன் மொழிபெயர்ப்பு- முன்னுரை". திண்ணை. https://old.thinnai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8B_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D__%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0/. பார்த்த நாள்: 16 May 2024.
- ↑ "தொழில்நுட்ப மறைஞானி". 2023-10-15.
{{cite magazine}}
: Cite magazine requires|magazine=
(help)