பிரம்மால்லைட்டு
பிரம்மால்லைட்டு (Brammallite) என்பது (Na,H3O)(Al,Mg,Fe)2(Si,Al)4O10[(OH)2·(H2O)] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும். இல்லைட்டு கனிமத்தின் சோடியம் மிகு ஒத்தவரிசை கனிமமாக இது வகைப்படுத்தப்படுகிறது. 1943 ஆம் ஆண்டில் வேல்சில் உள்ள கார்மர்தன்சையரில் முதன் முதலில் கண்டறியப்பட்டது. பிரித்தானிய புவியியலாளரும் கனிமவியலாளருமான ஆல்ஃபிரட் பிரம்மால் (1879-1954) நினைவாக கனிமத்திற்கு பிரம்மால்லைட்டு என அவர் பெயரிடப்பட்டது. பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் Bmr என்ற குறியீட்டால் பிரம்மாலைட்டை அடையாளப்படுத்துகிறது.[3]
பிரம்மால்லைட்டு Brammallite | |
---|---|
பொதுவானாவை | |
வகை | பைலோசிலிக்கேட்டு |
வேதி வாய்பாடு | (Na,H3O)(Al,Mg,Fe)2(Si,Al)4O10[(OH)2·(H2O)] |
இனங்காணல் | |
நிறம் | வெண்மை |
படிக இயல்பு | களிமண் போன்றது |
படிக அமைப்பு | ஒற்றைச் சரிவச்சு |
பிளப்பு | சரிபிளவு {001} |
மோவின் அளவுகோல் வலிமை | 2 1⁄2 - 3 |
மிளிர்வு | மங்கலான மண் |
கீற்றுவண்ணம் | வெண்மை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிகசியும் |
ஒப்படர்த்தி | 2.83 - 2.88 |
ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (-) 2V: கணக்கீடு: 5° முதல் 25° |
ஒளிவிலகல் எண் | nα = 1.535 - 1.570 nβ = 1.555 - 1.600 nγ = 1.565 - 1.605 |
இரட்டை ஒளிவிலகல் | δ = 0.030 - 0.035 |
மேற்கோள்கள் | [1][2] |
பாராகோனைட்டின் சிதைவுப் பொருளாக இது நம்பப்படுகிறது. இல்லைட்டு போல இதுவும் விரிவடையாத, களிமண் அளவிலான, மைக்காசியசு வகை கனிமமாகும். பிரம்மாலைட்டு என்பது பைலோசிலிகேட்டு வகை அல்லது அடுக்கு சிலிக்கேட்டு வகை கனிமம் ஆகும். கட்டமைப்பு ரீதியாக, பிரம்மால்லைட்டு சற்று அதிக சிலிக்கான், மக்னீசியம், இரும்பு, நீர் மற்றும் சற்றே குறைவான நான்முக அலுமினியம் மற்றும் உள்ளடகுக்கு பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்ட மசுகோவைட் அல்லது செரிசைட்டு கனிமத்தை போன்ற வடிவம் கொண்டுள்ளது.
சிறிய ஒற்றை சரிவச்சு வகை படிகக் கனிமமாக வெள்ளை நிறத்தில் பிரம்மால்லைட்டு தோன்றுகிறது. சிறிய அளவில் கிடைப்பது காரணமாக, நேர்மறை அடையாளம் காணப் பொதுவாக எக்சுகதிர் விளிம்புவளைவு பகுப்பாய்வு தேவைப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://www.mindat.org/min-816.html Brammallite at Mindata.org
- ↑ http://webmineral.com/data/Brammallite.shtml WebMineral
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.