பிரவீன் குமார் (உஷூ)


பிரவீன் குமார் இந்தியாவைச் சேர்ந்த ஒரு சாண்டா சண்டை விளையாட்டு வீரர் ஆவார். 2019 ஆம் ஆண்டு சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உலக உஷூ கோப்பைக்கான போட்டியில் ஆண்களுக்கான சாண்டா 48 கிலோகிராம் பிரிவில் வெற்றி பெற்று உலக சாம்பியனானார்.இதன் மூலம் உஷூ கோப்பைக்கான போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற முதல் இந்திய ஆண் தடகள வீரர் ஆனார்.

பிரவீன் குமார்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியன்
தொழில்உஷூதடகளம், குத்துச்சண்டை
Employerஇந்திய இராணுவம்
எடை48 கிலோகிராம்
விளையாட்டு
விளையாட்டுஉஷூ
நிகழ்வு(கள்)சாண்டா
பயிற்றுவித்ததுஇராஜேஷ் டைலர்[1]
பதக்கத் தகவல்கள்
Men's Sanda
நாடு  இந்தியா
World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 2019 Shanghai 48 Kg
Asian Championships
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2016 Taoyuan 48 Kg

தைவானின் தாயுவானில் நடந்த 2016 ஆசிய உஷூ கோப்பைக்கான போட்டியில் ஆண்களுக்கான சாண்டா 48 கிலோகிராம் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். உள்நாட்டுப் போட்டியில், பிரவீன் குமார் 2014 ஆம் ஆண்டு தேசிய இளையோருக்கான வெள்ளிப் பதக்கத்தையும், 2015ஆம் ஆண்டு தேசிய வயதுவந்தோருக்கான தங்கப் பதக்கத்தையும் வென்றார். தற்போது இந்திய ராணுவத்தில் பணியாற்றி வருகிறார்.

மேலும் பார்க்கவும்

தொகு
  • 2019 உலக உஷூ சாம்பியன்ஷிப்

குறிப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரவீன்_குமார்_(உஷூ)&oldid=3691235" இலிருந்து மீள்விக்கப்பட்டது