உஷூ
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
உஷூ (Wushu,எளிய சீனம்: 武术; மரபுவழிச் சீனம்: 武術) மரபார்ந்த சீனச் சண்டைக் கலைகளை அடிப்படையாகக் கொண்ட ஒருவரோடொருவர் மோதும் உடல் திறன் விளையாட்டு ஆகும்;[1][2] 1949இல் சீனாவில் பரம்பரை சண்டைக் கலைகளை சீர்தரப்படுத்துகையில் இந்த விளையாட்டு உருவானது.[3] சீர்தரப்படுத்தும் முயற்சிகள் முன்னதாகவும் எடுக்கப்பட்டு 1928இல் நாஞ்சிங்கில் மைய கோஷு கழகம் உருவானது. உஷூ என்ற சீனச் சொல் "சண்டைக் கலைகள்" (武 "Wu" = படை அல்லது சண்டை, 术 "Shu" = கலை) எனப் பொருள்படும். பன்னாட்டு உஷூ கூட்டமைப்பு இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை பன்னாட்டு உஷூ போட்டிகளை நடத்துகின்றது. முதல் உலகப் போட்டிகள் பெய்ஜிங்கில் 1991இல் நடைபெற்றன.[4]
10வது அனைத்துச் சீன போட்டிகளில் உஷூ. | |
வேறு பெயர் | குங் ஃபூ, கொங் ஃபூ, சீன சண்டைக் கலை |
---|---|
நோக்கம் | தாக்குதல், பிடித்தல், தூக்கி எறிதல், சண்டை நிகழ்த்து கலை |
தோன்றிய நாடு | சீன மக்கள் குடியரசு |
பெயர் பெற்றவர்கள் | ஜாக்கி சான், யெற் லீ, வு பின், ரே பார்க், யோன் ஃபூ, ஸ்காட் அட்கின்ஸ் |
ஒலிம்பிய விளையாட்டு | இல்லை |
உஷூ போட்டிகளில் இரண்டு வடிவங்கள் உள்ளன: டயோலு (套路; வடிவங்கள்) மற்றும் சான்டா (散打).[5]
மேற் சான்றுகள்
தொகு- ↑ "Kung Fu Fighting for Fans". நியூஸ்வீக். 2010-02-18. http://blog.newsweek.com/blogs/beijingolympics/archive/2008/08/23/kung-fu-fighting-for-respect.aspx.
- ↑ Wren, Christopher (1983-09-11). "Of monks and martial arts". New York Times. http://www.nytimes.com/1983/09/11/travel/of-monks-and-martial-arts.html?scp=10&sq=wushu&st=cse. பார்த்த நாள்: 2010-08-11.
- ↑ Fu, Zhongwen (1996, 2006). Mastering Yang Style Taijiquan. Louis Swaine. Berkeley, California: Blue Snake Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-58394-152-5.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ Lee, Sb; Hong, Jh; Lee, Ts (2007). "Wu Shu". Conference proceedings : ... Annual International Conference of the IEEE Engineering in Medicine and Biology Society. IEEE Engineering in Medicine and Biology Society. Conference (British Kung Fu Association) 2007: 632–5. doi:10.1109/IEMBS.2007.4352369. பப்மெட்:18002035. http://www.laugar-kungfu.com/wushu.asp. பார்த்த நாள்: 2008-08-27
- ↑ International Wushu Federation. Wushu Sport பரணிடப்பட்டது 2014-09-04 at the வந்தவழி இயந்திரம்.