பிரவீன் தொகாடியா
பிரவீண் தொகாடியா(Praveen Togadia), விஷ்வ ஹிந்து பரிசத் அமைப்பின் தற்போதைய பொதுச் செயலாளராவார். 1957ல் குஜராத்தில் பிறந்த இவர் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணராக பணிபுரிகிறார். அகமதாபாத்தில் பள்ளி படிப்பை முடித்து, மருத்துவம் படித்தார். இளமைக் காலத்திலேயே ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தில் ஈடுபாடுகொண்டிருந்தார். 1979ல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் பயிற்சி முகாம்களின் பயிற்சியாளராக பணியேற்றார்.[1]
பிரவீண் ஜெய் தொகாடியா | |
---|---|
பிறப்பு | 1957 குஜராத் |
பணி | விசுவ இந்து பரிசத் |
சமயம் | இந்து சமயம் |
மதமாற்றத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்யும் இவர், இந்துத்துவ அமைப்பின் மூலம் வன்முறையைத் தூண்டுவதில்லை என்றும் சிறுபான்மையினருக்கு தான் எதிரானவரில்லை என்றும் கூறியுள்ளார். விஷ்வ ஹிந்து அமைப்பின் மூலம் சர்வதேச அளவில் இந்து சமயத்தவருக்காக குரல் கொடுப்பதாகக் கூறியுள்ளார்.[2]
இவர் சமீபத்தில் ஹிந்துக்கள் வீட்டை முஸ்லீம்கள் வாங்க கூடாது என்று கூறியுள்ளார். குஜராத்தின் பாவ்நகரில் முஸ்லிம் தொழிலதிபர் ஒருவர் மெகானி சர்க்கிள் என்ற பகுதியில் ஹிந்து ஒருவருக்குச் சொந்தமான வீட்டை விலைக்கு வாங்கியதை தடை செய்ய வேண்டும் என்றும், அவர் வாங்கிய வீட்டிலிருந்து 48 மணி நேரத்திற்குள் காலி செய்ய வேண்டும் என்றும் தொகாடியா கெடு விதித்திருகின்றார். அத்துடன் இப்படி சொத்துகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துக் கொள்வதன் மூலம்தான் வேறு சமூகத்தினர் சொத்து வாங்குவதை தடுக்க முடியும் என்று கூறியிருக்கிறார். மேலும் அந்த வீட்டில் வசித்து வரும் முஸ்லிம்கள் வீட்டைக் காலி செய்ய 48 மணி நேர கெடுவையும் தொகாடியா விதித்துள்ளார். "ராஜிவ் காந்தி கொலையாளிகளே தூக்கிலிடப்படாத நிலையில் எந்த ஒரு வழக்கு வந்தாலும் சந்திப்போம்" என்றும் இவர் கூறியுள்ளார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ [1]
- ↑ 'Nobody has the right to convert anybody in India' பரணிடப்பட்டது 2012-04-12 at the வந்தவழி இயந்திரம், Praveenbhai Togadia Chat
- ↑ http://tamil.oneindia.in/news/india/evict-muslims-from-hindu-areas-pravin-togadia-198661.html