பிராங்ளினைட்டு
பிராங்ளினைட்டு (Franklinite) என்பது Zn2+Fe23+O4 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு கனிமமாகும்.. ஓர் ஆக்சைடு கனிமமாக வகைப்படுத்தப்படும் இது சாதாரண பல்வண்ணப் பளிங்குருவ இரும்பு துணைக்குழு கனிமங்களில் ஒன்றாக வகைப்படுத்தப்படுகிறது. பன்னாட்டு கனிமவியல் நிறுவனம் Frk[2] என்ற குறியீட்டால் இதை அடையாளப்படுத்துகிறது.
பிராங்ளினைட்டு Franklinite | |
---|---|
பிராங்ளினைட்டு (கருப்பு) உடன் வில்லெமைட்டு (சிவப்பு) மற்றும் கால்சைட்டு (வெண்மை) | |
பொதுவானாவை | |
வகை | ஆக்சைடு கனிமம் பல்வண்ணப் பளிங்குருவம் பல்வண்ணப் பளிங்குருவ குழு |
வேதி வாய்பாடு | ZnFe2O4 |
இனங்காணல் | |
நிறம் | கருப்பு |
படிக இயல்பு | எண்முகம் |
படிக அமைப்பு | கனசதுரம் |
பிளப்பு | இல்லை; நான்கு திசைகளிலும் தெளிவற்ற எண்முகப் பிரிவு |
முறிவு | irregular/uneven, conchoidal |
விகுவுத் தன்மை | நொறுங்கும் |
மோவின் அளவுகோல் வலிமை | 5.5–6 |
மிளிர்வு | உலோகத்தன்மை |
கீற்றுவண்ணம் | செம்பழுப்பு முதல் கருப்பு வரை |
ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது |
ஒப்படர்த்தி | 5.07–5.22 |
புறவூதா ஒளிர்தல் | இல்லை |
கரைதிறன் | HCl இல் கரையும் |
பிற சிறப்பியல்புகள் | காந்தப்பண்பு |
மேற்கோள்கள் | [1] |
மற்றொரு பல்வண்ணப் பளிங்குருவ குழு உறுப்பினரான மேக்னடைட்டைப் போலவே, பிராங்லினைட்டு மாதிரிகளில் இரும்பு (2+) மற்றும் பெரிக் (3+) இரும்புகள் இரண்டும் காணப்படுகின்றன. ஈரிணைதிற இரும்பு / அல்லது மாங்கனீசு பொதுவாக துத்தநாகத்துடனும் மூவிணைதிற மாங்கனீசு பெர்ரிக் இரும்புக்கு மாற்றாகவும் இடம்பெயர்ச்சி செய்யப்பட்டிருக்கும்.
முதன் முதலில் பிராங்லினைட்டு கண்டுபிடிக்கப்பட்ட இடத்தில் பரந்த அளவிலான பிற கனிமங்களுடன் சேர்ந்து காணப்பட்டது. அவற்றில் பல ஒளிரும் தன்மை கொண்டிருந்தன. பொதுவாக, இது வில்லெமைட்டு, கால்சைட்டு மற்றும் சிங்சைட்டு ஆகியவற்றுடன் சேர்ந்து காணப்படுகிறது. இந்தப் பாறைகளில், பரவலாக இவை சிறிய கருப்பு நிறப் படிகங்களாக அவற்றின் எண்முக முகங்கள் தெரியும் வகையில் படிகமாகின்றன. அரிதாக இது நிறைவடிவ படிகமாகவும் காணப்படுகிறது.
பிராங்லினைட்டு துத்தநாகத் தனிமத்தின் முக்கிய தாதுவாகும். நியூ செர்சியில் உள்ள பிராங்ளின் சுரங்கம் மற்றும் இசுடெர்லிங் இல் சுரங்கங்களில் உள்ளூர் கண்டுபிடிப்பின் அடிப்படையில் தாதுவுக்கு இப்பெயரிடப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் பிராங்ளினைட்டு நியூ செர்சியின் மாநில கனிமமாக அறிவிக்கப்பட்டது.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Chesterman, Charles W. (1978). The Audubon Society field guide to North American rocks and minerals. New York: Alfred A. Knopf. p. 418. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0394502698.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Office of the Governor | Governor Murphy Signs Legislation Designating Franklinite as State Mineral". www.nj.gov. பார்க்கப்பட்ட நாள் 2023-07-20.
புற இணைப்புகள்
தொகு- பொதுவகத்தில் பிராங்ளினைட்டு தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.