பிராசாத அகவல்

பிரசாத அகவல் [1] என்னும் நூல் பிரசாதம் [2] பற்றி விளக்கும் நூல். பிரசாதம் என்பது யோகமுத்திரை. இதனைப் பதினாறு கலை என்று கூறுவர். 'சோடசக் கலாப் பிரசாதம்' என்பது இதன் வடமொழி வழக்கு. பெயர், ஒளி, வடிவம், இடம், அளவு, தேவதை, குணம், தத்துவம் - ஆகிய எட்டின் சோதனை 8, மாத்திரை 8, - ஆக 16 - இவை சோடசக் கலாப் பிரசாதம். சைவ மடங்களில் உள்ள தம்பிரான்கள் இதன் 16 கட்டிடப் பகுதியிலும் பக்குவம் அடைந்து ஆன்மாவை இறைவன் திருவடிகள்ளில் சேர்ப்பார்களாம்.

இந்த நூல் தி௫க்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி ஆதீன கு௫ முதல்வர் சத்திய ஞானியின் ஞானாசிரியன் காவை அம்பலநாதத் தம்பிரான் அவர்களால் 14 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட நூல். இது ஒரு யோக நூல். மூச்சுப்பயிற்சி பற்றிக் கூறுகிறது.[3] மூச்சுக் காற்றுக்குப் பயிற்சியால் வலுவூட்டும் 'பிராணாயாமம்' பற்றிக் கூறுவது இந்த நூல். இந்தப் பொருள் பற்றித் தமிழில் தனிநூலாக உருவான முதல் நூல் இது எனத் தெரிகிறது.

பிராசாத தீபம், பிராசாத மாலை, பிராசாத விருத்தம், பிராசாத விளக்கம் என்னும் நூல்கள் காலவரிசையில் பிராசாத அகவல் நூலுக்குப் பின்னர் அடுத்தடுத்து வெளிவந்தவை.

பிராசாத அகவல் நூலுக்கு, இந்நூலாசிரியரின் மாணாக்கர் மதுரை ஞானப்பிரகாசர் சிறப்பான ஓர் உரை எழுதியுள்ளார். இந்த உரை இல்லாவிட்டால் இந்த நூலைப் புரிந்துகொள்வது முகவும் கடினம்.

பதிப்பு

  • மூலம் மட்டும் செந்தமிழ் (இதழ்) 1935
  • மூலமும் உரையும், சோமசுந்தர தேசிகர் பதிப்பு, சித்தாந்த வெளியீடு, 1935 [4]

அடிக்குறிப்பு

தொகு
  1. மு. அருணாசலம் (முதல் பதிப்பு 1969, திருத்தப்பட்ட பதிப்பு 2005). தமிழ் இலக்கிய வரலாறு, பதினான்காம் நூற்றாண்டு,. சென்னை: தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014. p. 182. {{cite book}}: Check date values in: |year= (help)
  2. ப்ரா - சிவஞானம்
    சா - கதி
    தா - தருவது
    பிராசாதம் = சிவஞானக் கதியைத் தருவது
  3. உணவுப் பொருள்களைச் சாத(க)ம் செய்து உண்கிறோம்
    அதுபோல,
    பிராண வாயுவைச் சாத(க)ம் செய்து உடலுக்கு வலிமையாக்கிக்கொள்வது 'பிராசாதம்'

  4. இதில் உரையாசிரியர் பெயர் குறிப்பிடப்படவில்லை.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராசாத_அகவல்&oldid=1767274" இலிருந்து மீள்விக்கப்பட்டது